 2006ஆம் ஆண்டுக்கான உலக குறுகிய பாதை விரைவுப் பனிச்சறுக்கல் போட்டி நேற்று அமெரிக்காவின் MINNEAPOLIS நகரில் நிறைவடைந்தது. மகளிருக்கான 500 மீட்டர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனை வாங் மொங் சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான 3000 மீட்டர் தொடர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் பெற்றனர். ஆடவருக்கான 5000 மீட்டர் தொடர் பனிச்சறுக்கல் போட்டியில் சீன அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இவ்வாறு, இந்த போட்டியில் சீன அணி மொத்தம் 2 தங்கம் மற்றும் 6 வெள்ளிப்பதக்கங்களைப் பெற்று பதக்க வரிசையில் மூன்றாம் இடம் வகிக்கிறது. தென் கொரிய அணி 5 தங்கம், 3 வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று முதல் இடத்திலும், கனடா அணி 3 தங்கம் 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளன.
|