• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-04 13:22:27    
சீன மூலிகை மருந்து

cri

கலை.......சரி, முதலில் சீனாவின் ஸச்சான் மாநிலத்தின் தொசியான்யேன் நகரில் உள்ள யூன்சன் கிராமத்தில் வாழ்கின்ற விவசாயி யூ மின் யின் அம்மையாரை பார்க்கலாமா?

ராஜா......அவரை பற்றி சொல்லுங்கள்.

கலை.......சொல்வேன். 5 ஆண்டுகளுக்கு முன் யூ மின் யின் அம்மையாருக்கு தீரா பித்தப்பை வீக்கம் நோய் ஏற்பட்டது. நோயை உறுதிப்படுத்திய பின் அவர் சீன மூலிகை மருந்தை சாபிட்டு சிகிச்சை பெற தீர்மானித்தார். கடந்த ஆண்டுகளில் சீன மூலிகை மருந்தை உட்கொண்டு ஆண்டுக்கு சில நூறு யுவான் மட்டும் செலவழித்துள்ளார். மலிவானது. ஆனால் பயன் மிக்கது. சில நாட்களுக்கு முன் தடுமம் ஏற்பட்டதால் பித்தப்பை வீக்கம் மீண்டும் ஏற்பட்டது. டாக்டரிடம் காட்டி பார்த்து தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சீன மூலிகை மருந்து சாப்பிட்டு 12 யுவான் மட்டுமே செலவிட்டு குணமடைந்தார்.

ராஜா......சீன மூலிகை மருந்து இவ்வளவு பயன் தருகிறதா?

ஆச்சரியமாக இருக்கின்றது. மக்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்? உதாரணம் எடுத்துக்காட்டலாமா?

கலை........கண்டிப்பாக. யூன்சன் கிராமத்துக்கு அருகில் உள்ள யூதாங் கிராமத்தில் கிராம மருத்துவமையம் ஒன்று உள்ளது. கிராமவாசி லோ பின் நமது செய்தியாளர்களிடம் மூலிகை மருந்து சாப்பிடும் ரகசியத்தை விளக்கி கூறுகின்றார்

 

சீன மூலிகை மருந்து சாப்பிட்டால் அதன் பக்க விளைவு மிக குறைவானது. சிகிச்சை பயன்பாடு சிறப்பானது. மருந்து விலையும் மலிவானது. எங்கள் கிராமவாசிகள் நோய்வாய்படும் போதெல்லாம் சீன மூலிகை மருந்தையே விரும்புகின்றனர்.

ராஜா....... கிராமப்புறத்தில் ஒவ்வொருவரும் சீன மூலிகை மருந்து மருத்துவரை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் சிகிச்சை கட்டணமாக 6 முதல் 8 யுவான் வரை செலவு செய்தால் போதும். மேலை நாட்டு மருந்து கட்டணத்தை காட்டிலும் 20 முதல் 30 விழுக்காடு குறைவாகும் என்பதை அண்மையில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பிலிருந்து அறிந்து கொண்டேன்.

கலை........நீங்கள் நுணுக்கமாக கவனித்துள்ளீர்கள். இது உண்மைதான். தற்போது துச்சியான்யேன் நகரில் 140க்கும் அதிகமான வட்டார மருத்துவ மனைகளில் சீன மூலிகை மருத்துவத் துறை நிறுவப்பட்டுள்ளது. சீன மூலிகை துறை அங்கே பரவலாகன பின் ஆண்டுக்கு சராசரியாக ஒரு நபருக்குச் செலவிடப்படும் சிகிச்சை செலவு குறைந்துள்ளது. இதனால் நோயாளிகளின் குறிப்பாக கிராமப்புற நோயாளிகளின் பொருளாதார சுமை குறைந்துவிட்டது.

ராஜா.......சரி. துச்சியான்யேன் நகரில் வாழ்கின்ற யான்யூன் என்பவர் ஒரு கிராமப்புற மருத்துவர் அவர் பணிபுரிகின்ற மருத்துவ நிலையத்தில் மூவர் மட்டும் மருத்துவ மனையை சுற்றியுள்ள 3 கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு சேவை புரிகின்றனர். இது பற்றி அவர் கூறியதாவது இந்த மூன்று கிராமங்களில் சுமார் 5500 பேர் வாழ்கின்றனர். சீன மூலிகை மருந்தை அவர்கள் நோய்வாய்பட்ட போது முதலில் விரும்புகின்றனர். சராசரியாக பார்த்தால் சீன மூலிகை மருந்து மக்கள் உட்கொள்ளும் மருந்தில் 40 விழுக்காடாக உள்ளது என்றார்.


1  2