• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-04 13:22:27    
சீன மூலிகை மருந்து

cri

ராஜா......சீன மூலிகை மருந்துக்கு 5000 ஆண்டுகளுக்கும் அதிகமான வரவாறு இருப்பதாக சொல்கிறார்கள். சரியா?

கலை........நூற்றுக்கு நூறு சரிதான். மூலிகை மருந்தை சீனத் தேசத்தின் பாரம்பரிய பண்பாட்டில் ஒரு முக்கிய பகுதியாக கூறலாம். சீன மக்கள் இதன் மீது ஆழந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ராஜா......ஆமாம். தற்போதைய சமூகத்தில் மேலை நாட்டு மருந்து மருத்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தினாலும் சீன மூலிகை மருந்துக்கு அதன் பல்வகை சிகிச்சை முறைகளுக்கும் மக்களிடையே தனி வரவேற்பு உள்ளது.

கலை........அது மட்டுமல்ல, இந்த சிகிச்சை நல்ல பலனளிக்கின்றது. அதன் விலையும் மேலை நாட்டு மருந்துகளின் விலையை விட குறைவானது.

ராஜா....சரிதான் சமீபத்தில் எனக்கு தடுமம் பிடித்தது. டாக்டரை பார்த்த பின் சீன மூலிகை மருந்து தந்தார். நான் இந்த மருந்தை சாப்பிட்டதும் குணமாகிவிட்டது. சீன மூலிகை மருந்து கசப்பாக இருந்தாலும் விரைவில் குணப்படுத்தக் கூடியது.

கலை........சரிதான். பொதுவாக சீன விவசாயிகள் நோய்வாய்பட்ட போது சீன மூலிகை மருந்தைத் தான் முதலில் விரும்புகின்றனர்.

ராஜா.......இது எனக்கு தெரிந்தால் மட்டு போதாது. உண்மை சம்பவங்களை சொன்னால் தான் நேயர்கள் நம்புவார்கள்.

1  2