• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-05 13:07:30    
பெய்சிங்கில் திரைப்பட அரங்கத்தின் மாற்றம்

cri

முதலில் சீனாவின் பெய்சிங் மாநகரில் வசிப்பவர்கள் செல்லிட பேசி மூலம் திரையரங்க நுழைவுச் சீட்டுக்களை முன்பதிவு செய்யலாம் என்ற தகவலை கேட்டு இது உண்மையா. எந்த அளவிற்கு தற்போது மக்கள் திரைப்படங்களின் மீது ஆர்வம் காட்டுகின்றனர் என்ற ஐயத்துடன் செல்வம் வினா எழுப்பினார்.

இணைய தளத்தின் விரைவாக வளர்ச்சியடைந்த இன்றைய நிலையில் சீனாவில் குறிப்பாக பெய்சிங் போன்ற மாநகரங்களில் வாழ்கின்ற இளைஞர்கள் திரையரங்க நுழைவு சீட்டுக்களை முன்கூட்டியே வாங்குவது, ரயில்வே பயண சீட்டு முன் பதிவு செய்வது, நூல்கள், அழகு பொருட்கள் வீட்டு சாமாந்கள், ஆடைகள், உணவு பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது வழக்கமாகிவிட்டது. இது நகர இளைஞர்களிடையில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இணைய தளத்தின் மூலம் பொருட்களை வாங்குவதால் வாழ்க்கையில் நேரம் மிச்சமாகிறது. கணிகணியின் முன்னாள் உட்கார்ந்து பொருட்களை வாங்குவது மிகமிக வசதியானது.

சீட்டுக் கட்டணம் சிலசமயங்களில் நேரடியாக திரைப்பட அரங்கு சென்று வாங்குவதை விட 20 விழுக்காடு குறைவாக உள்ளது. ஒரு செட் சீட்டுகளை வாங்கினால் மேலும் மலிவாகும். ஆகவே இப்போது பொதுவாக ஒரு திரைப்படத்தை பார்த்தால் சாதாரண திரைப்படத்திற்கான சீட்டு விலை 30 ரென்மின்பி யுவான் என்று குறிப்பிடபடுகின்றது. இளைஞர்கள் இதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். இது வேஷன் முயற்சியாக கருதப்படலாம்.

அடுத்து பெய்சிங் மாநகரில் சுமார் எத்தனை திரைப்பட அரங்குகள் உள்ளன?திரைப்படம் அல்லது பீகிங் இசை நாடகம் இவற்றில் எதைப் பார்க்க பெய்சிங் வாசிகள் விரும்புகின்றனர்?மிக பெரிய திரையரங்கம் எது?என்று செல்வம் கேட்கிறார்.

ஒரு நூற்றாண்டு வளர்ச்சியில் பெய்சிங் திரையரங்குகள், திறந்த வெளியில் திரைப்படம் காட்டுவது என்ற நிலையில் இருந்து உயர்ந்து ஐந்து நட்சத்திர திரையரங்குகளாக உயர்ந்து விட்டன. 1902ம் ஆண்டில் அந்நியர் ஒருவர் திரைப்படம் காட்டும் கருவியுடன் பழைய பெய்சிங் நகரின் சியென் மன் வாசலுக்கு முன்னால் இருந்த தொழிற்சாலை ஒன்றுக்கு வந்து மூன்று திரைப்படங்களை திரையிட்டார். இந்த மூன்று திரைப்படங்களும் எளிமையான நகைச்சுவை திரைப்படங்கள். முழுமையான கதை இல்லை. 1907ம் ஆண்டில் பெய்சிங் நகரின் முக்கிய சாலையான கிழக்கு சான் ஆன் சாலையின் வடக்கு பகுதியில் பீன் ஆன் திரைப்பட நிறுவனம் தோன்றியது அதை நடத்தியவர் ஒரு அந்நியர். சீட்டு விலை மிக அதிகம். சாதாரன நகரவாசிகள் இதை வாங்க முடியாத நிலை.

1918ம் ஆண்டில் பீகிங் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மேற்படிப்பு பயின்ற மாணவர் லோ மின் யூ அந்நியரின் ஏகபோகத்தை முறியடிக்கும் மனவுறுதியுடன் துங் ஆன் சந்தையிலுள்ள தான் குவெய் யூன் என்னும் இடத்தை குத்தகைக்கு வாங்கி "சன் குவான் திரைப்பட அரங்கை"நிறுவினார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்தத் திரைப்பட அரங்கு தீயில் எரிந்து நாசமானது. ஆனால் லோ மின் யூ மீண்டு இன்னொரு திரைப்பட அரங்கை தானாகவே முதலீடு செய்து நிறுவினார். ஆயிரம் பேர் உட்கார்ந்து திரைப்படத்தை கண்டுரசிக்கும் இந்த திரைப்பட மையத்தில் தேநீர் கடை, மதுவகம் முதலிய சேவை வசதிகளும் இணைக்கப்பட்டன.

இந்த திரைப்பட அரங்கு இப்போதைய சீன குழந்தை அரங்கு என அழைக்கப்படுகின்றது. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் மூள்வதற்கு முன் பெய்சிங்கில் 30க்கும் அதிகமான திரைப்பட அரங்குகள் இருந்தன. 1949ம் ஆண்டு நவ சீனா நிறுவப்படுவதற்கு முன் பெய்சிங்கில் இருந்த திரைப்பட அரங்குகளின் எண்ணிக்கை 26. விடுதலைக்கு பின் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அரசும் வளர்ச்சி நிதி குறைவாக இருந்த போதிலும் அதிலிருந்து சிறிது பணம் ஒதுக்கி 5 திரைப்பட அரங்குகளை கட்டின. 1950ம் ஆண்டில் கோமின் திரைப்பட அரங்கு பழுதுபார்க்கபட்ட பின் "தலைநகர் திரைப்பட அரங்கு"என பெயர் மாற்றப்பட்டது.