• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-05 13:05:52    
மின்னஞ்சல் தொகுதி

cri

வளவனூர் முத்துசிவக்குமரன் கடந்த 23ந் நாள் அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் மரபணு தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்களையும், 24ந் நாள் நட்புப் பாலம் நிகழச்சியில் ஒலிபரப்பான பர்மாராஜுவின் பேட்டியையும் பாராட்டியுள்ளார். தருச்செங்கோடு சினனார்பாளையும் சக்திவேல் நமது இணையத்தில் நலவாழ்வுப் பாதுகாப்பு, இன்பப் பயணம் ஆகிய கட்டுரைகளைப் பார்த்துவிட்டு, நிழற்படங்கள் அற்புதம் என்கிறார். இனிவரும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கதை சொன்னால் நன்றாக இருக்கும் என்கிறார் பாண்டிச்சேரி என்.பாலகுமார். உத்தங்கரை நேயர் கவி. செங்குட்டுவன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பகளாயூர் நாச்சிமுத்துவின் பேட்டியும், நேருக்கு நேர் நிகழ்ச்சியில் எஸ்.செல்வம் பேட்டியும் நன்று என்று குறிப்பிட்டுள்ளார். Ting zhong men, ni men hao என்றால், நேயர்களே வணக்கம். அப்படியானால் நண்பர்களே வணக்கம் எப்படிச் சொல்வது என்று கேட்கிறார் பேளுக்குறிச்சி க.செந்தில்.

வாணி—நண்பர்களுக்கு வணக்கம் சொல்ல peng you men, ni men hao. என்று சொல்ல வேண்டும்.

ராஜா-- சீனாவில் செய்தித்தாள் வெளியீடு பற்றி செய்தித் தொகுப்பை பாராட்டு செந்தில், சீன மொழி செய்தி ஏடுகள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன என்கிறீர்களே. இந்தியாவில் கிடைக்கிறதா? என்று வினவுகின்றார். மேலும் சீனத் திரைப்படம் பற்றிய செய்தித் தொகுப்பை பாராட்டுகின்றார்.

வாணி—ராஜா, உங்களுக்குத் தெரியுமா? தில்லியில் சீன மொழி ஏடு கிடைக்கிறதா?

ரா—இல்லை. தில்லி நகரின் பெரிய புத்தகக் கடைகளுக்கு போயிருக்கின்றேன். அங்கே முக்கியமானது செனட்ரல் நியூஸ் ஏஜன்சி அங்கு கிடைப்பதில்லை. சேந்தமங்கலம் எஸ்.எம். ரவிச்சந்திரன் தமது மின்னஞ்சலில் நேயர் நேரம் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நேயர்களையும் நேரில் பார்ப்பது போல அவர்களுடைய கடிதங்கள் வாசிக்கப்படுகின்றன என்று கூறிவிட்டு, மின்னஞ்சல் கடிதம் குறைவதற்கு பெரும்பாலான நேயர்கள் கிராமங்களில் வசிப்பது மற்றும் பணச் செலவே காரணம் என்கிறார். மேலும் மார்சு 27 இன்பப் பயணம் நிகழ்ச்சி உணவு அரங்கம் போலிருந்தது என்கிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் மார்சு 25 நிகழ்ச்சியில் சீன மக்கள் தேசியப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுபான்மை தேசிய இனப்பிரதிநிதிகள் பற்றி கூறியதை பாராட்டுகிறார். இசை நிகழ்ச்சியில் சிக்காப் வகை பாடல்களை வழங்கிய வான்மதிக்கு பாராட்டுகிறார். வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் தமது வான் அஞ்சலில், ஜனவரித் திங்கள் 27ந் நாள் ஒலிபரப்பான சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில், 100 குடும்பங்கள் மட்டுமே வாழும் ஓரிடத்தில் சர்வதேசத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது பற்றிக் கூறினீர்கள். இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்கிறார். இலங்கை காத்தான்குடி எம்.அய்.எஷ்.மர்ழியா, தனது பல நண்பர்கள் சீன வானொலியில் நேயர்கலாக் சேர ஆசைப்படுவதாகக் கூறுகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஆன்டரசன்பட்டி கே.எம். ராஜு, சீனத் தமிழொலி இதழில் நேயர்களின் படைப்புகள் வெளியிடப்பட வேண்டும் என்கிறார். மும்பையில் எம்.சுகுமார். சீன வானொலியை முழுவதும் கேட்டு முடிக்கும் போது, தரமான ஒரு பத்திரிக்கையை வாசித்த முடித்தது போல் இருக்கின்றது என்கிறார். சேலம் பாத்திமா நகர் எஸ்ஆர்.டி.பாலசுப்பிரமணியம், டிசம்பர் 19 அன்று எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் துருவித் துருவி கேள்வி கேட்டு நிகழ்ச்சி அமைப்பது நன்றாக இருக்கிறது என்கிறார். கே.மதன்குமார் என்கிற நேயர் தாளில் முகவரி இல்லாமல் எழுதிய கடிதம். தைவான் தீவு பற்றிய கேள்வித்தாள் பல கருத்துக்களைத் தந்தது எந்று கூறிவிட்டு, மக்களைக் கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளையும், போட்டிகளையும் நடத்த நேண்டும். மக்களுக்கும் சீன வானொலிக்கும் இடையே தொடர்பை இன்னும் நெருக்கமாக்க வேண்டும் என்கிறார்.

ஆரணி எம்.புவனேஸ்வரி, நேயர் மன்றக் கருத்தரங்கிற்கு நேரில் செல்ல முடியாத குறையை ஒலிபரப்பு நிறைவு செய்துவிட்டது என்று கூறிவிட்டு, ஜனவரி 9 மக்கள் சீனம் நிகழ்ச்சியில் ஒலிம்பிக சினனங்களின் விற்பனை பற்றிக் கூறப்பட்டதைப் பாராட்டுகின்றார்.