• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-05 19:20:02    
வேளாண் துறைக்கு நிதி உதவி

cri
மேலும் அதிக விவசாயிகள் உண்மையான பயன் அடையும் பொருட்டு, வேளாண் துறைக்கு நிதி உதவி அதிகரிக்கப்படும் என்று சீன வங்கி துறை கண்காணிப்பு மற்றும் நிர்வாக கமிட்டியின் தலைவர் லியு மிங் காங் கூறியுள்ளார்.

அண்மையில் பேசிய அவர், வேளாண் துறை வங்கி, வேளாண் வளர்ச்சி வங்கி மற்றும் கிராமப்புற ஒத்துழைப்பு நிதி நிறுவனங்கள் சீர்திருத்தப்படும் என்றார். கிராமங்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த நிதி நிறுவனங்கள் சேவை புரியும் திறனை வலுப்படுத்தி, வேளாண் தொழில் மயமாக்கத்தில் முக்கிய நிறுவனங்கள் நிதி திரட்டுவதற்கு உதவி அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக, வேளாண் துறைக்கு சீனாவின் நிதி நிறுவனங்கள் உதவி வழங்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 7 கோடி விவசாய குடும்பங்களுக்கு கடன் வழங்கப்படது.