• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-09 20:11:04    
பொது அறிவு போட்டி துவக்கம்

cri
சீனத் தமிழ் ஒலியின் அன்பு நேயர்களே இந்த ஆண்டு நமது நேயர்களுக்கென தமிழ் பிரிவு இரண்டு பொது அறிவுப் போட்டிகளை நடத்த உள்ளது. முதலில் “மேற்கு சீனாவின் முத்து”என்ற தலைப்பில் சீனாவின் சிங்கியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் மக்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கை, பெண்களின் லட்சியம் ஆகியவை தொடர்பான நான்கு கட்டுரைகள் இடம் பெறும். இக்கட்டுரைகளின் அடிப்படையில் 8 வினாக்கள் கேட்கப்படும். இக்கட்டுரைகளை கவனத்துடன் கேட்டு நேயர்கள் தங்களுக்கு அனுப்பப்படும் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். அடுத்து 2006ம் ஆண்டை நட்புறவு ஆண்டாக அனுசரிக்க இந்தியாவும் சீனாவும் தீர்மானித்துள்ள நிலையில் “சீன இந்திய நட்புறவு ஆண்டு”என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது. சீந இந்திய நட்புறவுக்காக “நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய முடியும்”என்பது பற்றி நேயர்கள் கட்டுரைகளை எழுதலாம். மூன்று பக்கங்களுக்கு மிகாமல் உங்களது கட்டுரைகள் அமைய வேண்டும். இப்போட்டிகள் பற்றிய கூடுதல் தகவல்கள் புதன் கிழமை இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். கேட்க தவராதீர்கள்.