
இன்று பெய்சிங்கில் நடைபெற்ற 2006ம் ஆண்டு மரதன் ஓட்டப்பந்தயத்தில், மகளிர் பிரிவில் சீனா முதலிடம் பெற்றது. ஆடவர் பிரிவில் முதலிடத்தை எத்தியோப்பிய அணி பெற்றது. முதன்முதலாக ஆடவர் பிரிவுப் போட்டியில் கலந்து கொண்ட சீன அணி, மூன்றாவது இடம் வகிக்கின்றது. இப்போட்டியை 1986ம் ஆண்டு சமாதானம் மற்றும் நட்புறவுக்காக சீன-ஜப்பானிய நட்பார்ந்த பிரமுகர்கள் இணைந்து துவக்கினர். இது வரை 21 முறை இந்த ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டுள்ளது.
|