• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-11 17:04:33    
சீன மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி

cri

 இதுவரை 10 ஆயிரக்கும் அதிகமான கிராமப்புற டாக்டர்களுக்கு சீன மூலிகை மருத்துவம் தொடர்பான நடுத்தரக் கல்வி பட்டயச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தவிரவும், ஸச்சான் மாநிலத்தில் அக்குபஞ்சர், மசாஜ் செய்வது போன்ற கிராமப்புறத்துக்கு ஏற்ற மூலிகை மருத்துவ நுட்பம் உற்சாகத்துடன் பரவலாக்கப்படுகின்றது. குறைந்த செலவு கட்டணத்துடன் கிராமப்புறத்தில் அடிக்கடி நிகழும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறந்த பலன் கிடைத்துள்ளது.

கலை......சீன மூலிகை மருத்துவத்தை பரவலாக்கும் போக்கில் ஸ்ச்சான் மாநிலத்தின் மூலிகை மருந்து நிர்வாக ஆணையத் தலைவர் யான்தியென்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது

ராஜா.......விவசாயிகளை பொறுத்தவரை சீன மூலிகை மருந்து பரவலாக்கப்பட்ட பின் விவசாயிகளுக்கு பொருளாதார சுமை குறைந்துள்ளது. நோய்கொண்ட உடனே, துவக்க நிலையிலேயே சிகிச்சை பெற்றால் நோய் கடுமையா வளத்த தடுக்கலாம். ஏராளமான பணச் செலவையும் தவிர்க்கலாம் என்றார்.

கலை.......சீனாவின ஸச்சான் மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை நிலைமை சீனாவின் நிலையை எடுத்துக் காட்டுகிறது. சீனாவின் பல மாநிலங்கள் குறிப்பாக மக்கள் தொகை அதிகமாக வகிக்கின்ற மேற்கு மற்றும் நடு மாநிலங்களில் மூலிகை மருந்து பயன்பாடு மேலும் அதிகமாக உள்ளது. 2004ம் ஆண்டின் இறுதி வரை சீனாவின் மாவட்ட நிலை மூலிகை மருத்துவ மனைகளின் எண்ணிக்கை 1500 ஆகும். நாட்டின் வட்ட நிலை மருத்துவ மனைகளில் 75 விழுக்காட்டு மனைகளில் சீன மூலிகை சிகிச்சை துறை நிறுவப்பட்டுள்ளது.

1  2  3