• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-10 17:28:57    
மடகாஸ்கர் தீவு வாழ் மக்கள் பற்றி பார்ப்போம்

cri

இரட்டை குழந்தைகள் பற்றி

மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்காவில் முதலிடமும் உலகில் 4வது இடம் வகிக்கிறது. அங்கு வாழ் மக்களிடையில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இரட்டை குழந்தை பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் முற்காலத்தில் இரட்டை குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரால் கைவிடப்படும். இப்போது கூட, இரட்டை குழந்தை பெற்றுக்கொண்ட குடும்பங்கள் சில மாடுகளைக் கொன்று படையில் செய்யும். அங்குள்ள மக்கள், மாடுகளை மடகாஸ்கர் மக்கள் உழவு செய்திவதற்கான கருவியாகவும் போக்குவரத்து கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். செல்வத்தின் அறிகுறியுமாகும். ஏழைகளானால் இரட்டை குழந்தைகளில் ஒன்றை மற்றவருக்கு அன்பளிப்பாக வழங்குவர்.

உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வது

மடகாஸ்கர் நாட்டில் தனியார் விமான போக்குவரத்து நிறுவனம் உண்டு. ஆனால், கோழிகள் விமானத்தில் செல்லாமல் இருப்பது நல்லது. ஏனெனில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனை இருக்காது. அதுவும் மடகாஸ்கர் பயணிகள் மற்றவருக்குத் தெரியாமல் உயிருள்ள கோழியுடன் விமானத்தில் செல்வதுண்டு. விமானச்சிப்பந்திகள் அதைப் பொருட்படுத்தவில்லை. அங்கு வழங்கப்படும் உணவும் மிகவும் எளிது. இரண்டு மீட்டாய்கள் மட்டுமே.

மடகாஸ்கர் நாட்டில் ரயில் பாதை உண்டு. அதுவும் உலகில் மிகவும் செங்குத்தான ரயில் பாதையாகும். மடகாஸ்கர் நகரங்களில் கிராமப்புறக்காட்சி எங்கெங்கும் காணலாம். மாட்டு வண்டிகளும் ரிக்ஷாக்களும் முக்கிய போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்கின்றன. சிறு வியாபாரிகள் வீதியின் இரு மருங்கிலும் வியாபாரம் செய்வார்கள். யுரோ அவர்களுக்கு மிகவும் பிடித்தமான நாணயமாகும். சுவை மிக்க கடல் உணவுக்கு இரண்டோ மூன்றோ யுரோ கொடுத்தால் போதும்.

பயணிகளை வேடிக்கை பார்ப்பது

மடகாஸ்கர் மக்கள் எளிய வாழ்க்கை நடத்திய போதிலும் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் வாழ்கிறார்கள். அங்கு பொழுது போக்கு நிகழ்ச்சிகள் குறைவு என்ற காரணத்தால், அவர்கள் பயணிகளை வேடிக்கை பார்ப்பதை தமது ஓய்வு நேர பொழுபோக்காகக் கருதுகின்றனர். அந்தி வேளையில் அவர்கள் வீதியின் இரு மருங்கிலும் உட்கார்ந்தவாறு கலந்து பேசும் போது, அங்கு போய் வரும் பயணிகளை வேடிக்கை பார்க்கிறார்கள். சிரிப்பொலி மக்களிடையில் அவ்வப்போது எழுகின்றது.