சீனாவில் அரசு உடைமை சாரா பொருளாதார வளர்ச்சியுடன், மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் முக்கிய வழியாக தனியார் தொழில் நிறுவனங்கள் மாறியுள்ளன. தனியார் தொழில் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு வழங்குவதை ஊக்குவிக்க, வேலை இழந்தவர்களை மறு வேலையில் சேர்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு வரிக்குறைப்பு அல்லது வரி விலக்கு, சிறு தொகை நம்பிக்கை கடன் உள்ளிட்ட பல சலுகைகளை சீன அரசு வழங்கும் என்று எமது செய்தியாளர் கூறுகிறார். தனியார் தொழில் நிறுவனங்கள் விளம்பரம் மூலம் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் வாரம் என்ற நடவடிக்கையை சீனாவின் 100க்கு அதிகமான நகரங்களில் தொழிலாளர் நலன் மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புக்கள் கூட்டாக நடத்தின. வேலையை இழந்தவர்கள், பல்கலைக்கழகப்பட்டதாரிகள், நகரங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் விவசாயிகள் ஆகியோர் இதனால் பயனடைந்தனர்.
|