
2006ஆம் ஆண்டு, பெய்சிங்கில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்களுக்காக திறந்தவெளி அரங்கங்களும் உள்ளரங்களும் கட்டப்படும் முக்கிய ஆண்டாகும். தற்போது, 17 ஆயிரத்துக்கும் அதிகமான பொறியாளர்களும் தொழிலாளர்களும் பல்வேறு கட்டுமான களங்களில் வேலை செய்து வருகின்றனர். "பறவை கூடு"என்று அழைக்கப்படும் தேசிய திறந்தவெளி விளையாட்டு அரங்கம், தேசிய நீச்சல் மையம், தேசிய விளையாட்டு உள்ளரங்கம், வூக்கேசொங் உடல்பயிற்சி மையம் முதலிய கட்டிடங்களின் முக்கிய கட்டமைப்புகள் இவ்வாண்டில் நிறைவேற்றப்படும்.
இலக்கு சுடுதல், உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் குவாங்சோ சுற்று ஏப்ரல் முதல் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நிறைவடைந்தது. 8 நாட்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனைகள் மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர். அவற்றில், மகளிருக்கான 50 மீட்டர் றைபில் சுடும் நிகழ்ச்சியில் சீன வீராங்கனை லியூ போ சாம்பியன் பட்டம் பெற்றார். மகளிருக்கான பத்து மீட்டர் ஏல் கை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் மகளிருக்கான பத்து மீட்டர் றைபில் சுடுதல் போட்டியிலும் சீன வீராங்கனை ரென் ஜே தங்கப் பதக்கங்களைப் வென்றார். ஏப்ரல் 3ஆம் நாள் முதல் பத்தாம் நாள் வரை, உலக கோப்பைக்கான பறக்கும் தட்டு சுடுதல் போட்டி சீனாவின் குவாங்துங் மாநிலத்தில் நடைபெறும்.

2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தொண்டர்களின் முழக்கங்களைத் திரட்டு உலகளாவிய பணி துவங்கியுள்ளதாக பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டி மார்ச் 31ஆம் நாள் பெய்சிங்கில் அறிவித்தது. முதலில் சேவை, முதலில் இணக்கம் என்ற சிந்தனையை இந்த முழக்கங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று கோரப்படுகின்றது. இந்த சேகரிப்புப் பணி ஆகஸ்ட் திங்கள் 31 நாள் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
கிராமங்களில் விளையாட்டுத் திட்டப்பணி சீனாவின் கிராமங்களில் விவாசாயிகளின் உடல் பயிற்சிக்கான திட்டப்பணி இவ்வாண்டின் நடுவில் துவங்க உள்ளது. அப்போது, உடல் பயிற்சி வசதிகள் கிராமங்களில் பரவலாக நிறுவப்படும். இந்த திட்டப்பணி 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். இதன் விளைவாக, சீனாவில் ஆறில் ஒரு பகுதி கிராமங்களில் தரமான பொது உடல் பயிற்சி களங்களும் வசதிகளும் காணப்படும். ஒவ்வொரும் கிராமத்திலும் ஒரு தரமான கூடைப் பந்து களமும் இரண்டு மேசை பந்து மேசைகளும் இருக்க வேண்டும் என்று கோரப்படுகின்றது. சீனாவில் 80 விழுக்காட்டு மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். ஆனால் கிராமங்களில் உடல் பயிற்சி வசதிகள் குறைவாகதான் உள்ளன.
|