• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-14 09:34:29    
கடந்த வார விளையாட்டுச் செய்திகள்

cri

டென்னிஸ் அமெரிக்காவின் MIAMI இல் நாஸ்டாக்-100 டென்னிஸ் ஒப்பன் போட்டி ஏப்ரல் 2ஆம் நாள் நிறைவடைந்தது. தர வரிசையில் முதலாவதாக உள்ள சுவீட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 3-0 என்ற செட் கணக்கில் கிரோஷியாவின் புகழ் பெற்ற வீரர் IVAN LJIBICIC ஐத் தோற்கடித்து இரண்டாம் முறையாக ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷியாவின் KUZNETSOVA 2-0 என்ற செட் கணக்கில் தமது சகநாட்டவரான மலியா ஷராபோவாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.

இலக்கு சுடுதல், உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் குவாங்சோ சுற்று ஏப்ரல் முதல் நாள் சீனாவின் குவாங்சோ நகரில் நிறைவடைந்தது. 8 நாட்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனைகள் மொத்தம் மூன்று தங்கப் பதக்கங்களையும் மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர். அவற்றில், மகளிருக்கான 50 மீட்டர் றைபில் சுடும் நிகழ்ச்சியில் சீன வீராங்கனை லியூ போ சாம்பியன் பட்டம் பெற்றார்.

மகளிருக்கான பத்து மீட்டர் ஏல் கை துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் மகளிருக்கான பத்து மீட்டர் றைபில் சுடுதல் போட்டியிலும் சீன வீராங்கனை ரென் ஜே தங்கப் பதக்கங்களைப் வென்றார். ஏப்ரல் 3ஆம் நாள் முதல் பத்தாம் நாள் வரை, உலக கோப்பைக்கான பறக்கும் தட்டு சுடுதல் போட்டி சீனாவின் குவாங்துங் மாநிலத்தில் நடைபெறும்.

2006ஆம் ஆண்டு உலக F1 கார் ஓட்ட சாம்பியன் பட்டப் போட்டியின் ஆஸ்திரேலிய சுற்று ஏப்ரல் 2 ஆம் நாள் நிறைவடைந்தது. RENAULT அணியைச் சேர்ந்த ஸ்பெயின் வீரர் அலோங்சோ ஒரு மணி 34 நிமிடம் 27.870 வினாடி என்ற சாதனையுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

கார் ஓட்டப் போட்டி 2005-2006 ஏ ஒன்று பெரும் பரிசு கார் ஓட்டப் போட்டியின் கடைசி சுற்று ஏப்ரல் 2ஆம் நாள் சீனாவின் சாங்கை சர்வதேச கார் ஓட்டப் போட்டி களத்தில் நிறைவடைந்தது. செக், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா முதல் மூன்று இடங்களை பெற்றன. செக் வீரர் ஏங்கர் 59 நிமிடம் 23.250 வினாடியில் போட்டியை நிறைவேற்றினார். சீன வீரர் ஜியாங் தெங் யீ சிறப்பாக விளையாடவில்லை, 16வது இடத்தில் மட்டும் இருந்தார். இதுவரை, இந்த போட்டி பருவத்தின் ஏ ஒன்று கார் ஓட்டப் போட்டி முழுவதும் நிறைவடைந்தது. மொத்த சாதனையில் பிரான்ஸ் முதலிடத்திலும், சுவீட்சர்லாந்து இரண்டாம் இடத்திலும் பிரிட்டன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. சீனா 22ஆம் இடத்தில் உள்ளது.