• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-13 10:51:03    
வன நகரம் குவெய்யாங்

cri

தென் மேற்கு சீனாவின் யுன்னான்-குவெய்சோ பீடபூமியில் வன நகரம் என்று அழைக்கப்படும் குவெய்யாங் நகரம் உள்ளது. இந்நகரில் மரங்களும் செடி கொடிகளும் அதிக அளவில் வளர்கின்றன. ஆண்டு முழுவதும் மிதமான வெப்பம் நிலவுகின்றது. நான்கு பருவங்களும் வசந்த காலம் போல இருக்கின்றன. இயற்கை காட்சி எழில் மிக்கது.

அத்துடன் சிறுபான்மை தேசிய இனத்தின் மணம் கமழும் பழக்க வழக்கங்களும் சுவையான உணவு வகைகளும் உள்ளன. குவெய்யாங் நகரம், சீனாவின் முதலாவது பெரிய ஆறான யாங்சி ஆற்றுக்கும், 3வது பெரிய ஆறான சூச்சியாங் ஆற்றுக்குமிடையே ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. உயரமான மலைக்குன்று, வடிநிலம், பள்ளத்தாக்கு ஆகியவற்றைக் கொண்ட இவ்விடத்தில் காட்டுத் தாவரங்கள் அதிக அளவில் வளர்வது இயல்பே.

குவெய்யாங் வனப்பூங்கா, சீனாவில் முதலாவது நகர வனப்பூங்கா. குவெய்யாங் நகரின் தென் பகுதியில் நகரத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது.

இதன் பரப்பளவு சுமார் 530 ஹெக்டர். நீளம் பல பத்து கிலோமீட்டர். தற்போதைய சீனாவில் மிக பெரிய பரப்பளவிலான நகர வனப்பூங்கா இது. குவெய்யாங் வனப்பூங்காவில் நுழைந்ததும், மரங்களின் நாட்டுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சீனாவில் முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள முதலாவது நிலையிலான தேவதாரு மரங்கள், சந்தன மரங்கள் உள்ளிட்ட சுமார் பத்தாயிரம் வகை மதிப்புள்ள மரங்கள் வளர்ந்துள்ளன. இவ்விடத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, பசுமையான அடர்ந்த மரம் செடிக்கொடிகளையும், பளிங்கு போன்ற நீரையும் கண்டுகளிக்கலாம்.

பறவைகள் கீச்சொலியைக் கேட்டு மகிழலாம். அதிர்ஷ்டமான பயணிகள் வனப்பூங்காவில் எறும்புண்ணும் விலங்குகள், காட்டுப் பன்றிகள் முதலிய விலங்குகளின் அடையாளங்களைக் காணக் கூடும்.

இந்நகரில், குவெய்யாங் வனப் பூங்கா தவிர, பயணிகளுக்குத் திறந்துவிடப்பட்டுள்ள வனப்பூங்காக்களும் வனப் பகுதிகளும் ஏராளமான ஆய்வாளர்களையும் பயணிகளையும் ஈர்த்துள்ளன. குவெய்யாங்கில் பயணம் மேற்கொண்டிருக்கும் சாங்காய் பயணி லியூயுன் அம்மையார், குவெய்யாங்கிலுள்ள வனப்பூங்கா மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது, இந்நகரில் 2 வாரம் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், இங்கு வானிலை மிக நன்றாக உள்ளது. இதுவரை 3 வாரங்கள் தங்கிவிட்டேன். விரைவில் 4வது வாரமும் ஆகிவிடும். இவ்விடத்தை விட்டுச் செல்ல விரும்பவில்லை. விடுமுறை நாட்கள் மேலும் இரண்டு திங்கள் அதிகரித்தால் நல்லது என்றார்.

அவரைப் போல, குவெய்யாங் நகருக்கு முதல் முறையாக வரும் இதர பயணிகள் பலர், உடனே இவ்விடத்தை விரும்பத் தொடங்கிவிடுகின்றனர். வனப்பூங்கா தவிர, குவெய்யாங்கில் விற்பனையாகும் சிற்றுண்டி வகையும் பயணிகளை ஈர்த்துள்ளன.

இரவில் குவெய்யாங் நகரிலுள்ள வீதிகளில் சுவையான உணவு மற்றும் காய்கறிகளின் நறு மணம் வீசுகின்றது. நீருற்று சதுக்கத்திலிருந்து பெரிய சச்சி வீதி வரை சிறிய பெரிய உணவகங்கள் வரிசை வரிசையாக இருக்கின்றன. உணவகங்களில் விளக்கு வெளிச்சம் ஒளிவீசுகின்றது. வீதிகளில் மக்கள் போய்வருகின்றனர். உணவுப் பண்பாடு, குவெய்யாங் மக்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி.

பல உணவகங்கள் நள்ளிரவு வரை திறந்துவைக்கப்பட்டுள்ளன. வீதிகளிலுள்ள கொட்டகைகளில் இதை விட மேலும் அதிக நேரம் சிற்றுண்டிகள் விற்கப்படுகின்றன. உண்மையிலே குவெய்யாங் நகரில் சுற்றுலா செய்யும் பயணிகள் இந்நகர மக்களின்

இரவு வாழ்க்கையை நேரடியாக அறிந்துகொள்ளாமல், அங்குள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருந்தால், குவெய்யாங் நகருக்கு உண்மையிலேயே போனார்கள் என்று சொல்ல முடியாது.

குவெய்யாங் நகரில் நூற்றுக்கும் அதிகமான உள்ளூர் பாரம்பரிய சிற்றுண்டி வகைகள் உள்ளன. குவெய்யாங் நகரம், ஹென் இன மக்களை முக்கியமாகக் கொண்ட, பல்வேறு தேசிய இன மக்கள் குழுமி வாழும் நகரம் ஆகும்.

இந்நகரில் 38 தேசிய இனங்கள் உள்ளன. இதனால், தேசிய இன பாணி உடையது. குவெய்யாங் நகரச் சுற்றுலாத் துறை அதிகாரி வாங்சன்செங் இது பற்றி கூறியதாவது,

புயி, மியௌ, தொங் ஆகிய இனங்களைச் சேர்ந்த மக்கள், எப்படிப்பட்டவர்கள்? எந்த வகை ஆடைகளை அணிகின்றனர்? என்பது பற்றி எனக்குத் தெரியாது.

நாங்கள் எது பற்றி அறிந்துகொள்ள வேண்டும்? அவர்களுடைய வாழ்க்கைப் பழக்க வழக்கங்கள் எவை? தேசிய இனப்பண்பாடு என்ன? அவர்களுடைய மூதாதையர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தியிருந்தனர்? இந்தப் பழக்க வழக்கங்கள் எவ்வாறு இதுவரை நிலைநிறுத்தப்பட்டுவருகின்றன? எழுத்துக்கள் எப்படி இருக்கும்? எந்த மொழியில் பேசுவார்கள் முதலியவற்றை அறிந்துகொள்ள வேண்டும் என்றார்.