• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-18 17:30:28    
பெய்ச்சிங் நகரின் குறுகிய வீதி—ஹூதொங் சுற்றுலா

cri

பெய்ச்சிங்கிற்கு வருகிறவர்களில் பலர், புகழ்பெற்ற பெருஞ்சுவரையும் அரண்மனை அருங்காட்சியகத்தையும் பார்வையிடுவதோடு, பெய்ச்சிங்கிலுள்ள குறுகிய வீதியான—ஹூதொங்கையும் கண்டு, தொன்மை வாய்ந்த பெய்ச்சிங் காட்சியை உணர விரும்புகின்றனர்.

ஹூதொங், பெய்ச்சிங்கில் மட்டுமே உள்ளது. 13வது நூற்றாண்டில் தோன்றிய இக்குறுகிய வீதிகளில் பெரும்பாலானவை, சீனாவின் யுவான், மிங் மற்றும் சிங் வமிசக் காலங்களில் உருவானவை. அப்போதைய பெய்ச்சிங் நகரில், கட்டடங்களின் வடிவமைப்பு பேரரசரின் அரண்மனையை மையமாகக் கொண்டு,அதன் சுற்றுப்புறத்தில் மக்களின் வீடுகள் கட்டப்பட்டன. ஹூதொங் என்னும் குறுகிய வீதிகள், மக்களின் வீடுகளுக்கிடையில் அமைந்துள்ளன.

கடந்த சில நூறு ஆண்டுகளின் மாற்றம் மற்றும் வளர்ச்சியினால், பெய்ச்சிங் நகரின் பழைய நகரப்பகுதிகளிலுள்ள அனைத்து இடங்களிலும் ஹூதொங்குகள் ஏற்பட்டுவிட்டன. அவை, மனிதரின் உடம்பிலுள்ள நரம்பு மண்டலம் போல குறுக்கு நெடுக்காக அமைந்துள்ளன. கடந்த காலத்தில் மட்டுமல்ல, தற்போதும் ஏராளமான பெய்ச்சிங் மக்களின் வாழ்க்கையுடன் அவை நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஹூதொங் என்னும் குறுகிய வீதிகளில் பெய்ச்சிங் மக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும் பல ஆண்டுகளுக்கு முன் தயாரித்து ஊற வைக்கப்பட்ட மது போல, மிகுந்த நறு மணம் வீசுகின்றன. ஹூதொங் என்னும் குறுகிய வீதிகளில் நடந்துசெல்லும் போது, பெய்ச்சிங் நகரின் வரலாற்றையும் அன்றாட நிலைமையையும் நேரடியாக அறிந்துகொள்ளலாம்.

சீன மக்களின் உண்மையான வாழ்க்கையை நேரில் காணலாம். எனவே, ஹூதொங்கில் நுழையாமல் பெய்ச்சிங்கை அறிந்துகொள்ள முடியாது என்று சொல்லப்படுகிறது. ஹூதொங்கிற்கு வராவிட்டால், பெய்ச்சிங்கிற்கு வந்ததாகச் சொல்ல முடியாது என பெய்ச்சிங் மக்கள் கருதுகின்றனர்.

ஆகவே, பெய்ச்சிங்கிலுள்ள சுற்றுலா நிறுவனங்கள், ஹூதொங் சுற்றுலா என்னும் சுற்றுலாத் திட்டத்தை வகுத்துள்ளன. சில ஹூதொங்களை, அதாவது சில குறுகிய வீதிகளை ஒன்றிணைத்து, ஒரு சுற்றுலாப் பயணத் திட்டத்தை உருவாக்கியுள்ளன. ஒரு பிரிவு சாதாரணக் குடும்பங்களைப் பயணிகள் பார்வையிடுவதற்கும் சிபாரிசு செய்யப்படுகிறது என்று பெய்ச்சிங் சியெஹு மாவட்ட ஹூதொங் சுற்றுலாத் திட்டப் பொறுப்பாளர் யாங்யி கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

புறப்படும் இடம், சியெமன் தைய்புன்லௌ. பயணிகள் பொதுவாக, 3 சக்கரங்களுடன் கூடிய சைக்கிளில் ஏறி சுற்றுலா செல்லும் போது தான் பழைய பெய்ச்சிங் நகர மக்களின் வாழ்க்கையை உணரலாம். தனிச்சிறப்பு வாய்ந்த அதாவது இரு நூறு அல்லது முன்னூறு ஆண்டுகள் வரலாறுடைய, நன்கு பாதுகாக்கப்பட்டுள்ள ஹூதொங்குகளைத் தேர்ந்தெடுத்து, பயணிகளுக்குப் பெய்ச்சிங் ஹூதொங் பற்றி வழிகாட்டி அறிமுகப்படுத்துவார்.

பின்னர், பயணிகள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பார்க்கலாம் என்றார்.

பெய்ச்சிங் ஹூதொங்கில் சுற்றுலா செல்லும் போது, பயணிகள் நடந்துசெல்ல வேண்டும். மூன்று சக்கரங்களுடன் கூடிய வாகனம் மூலமும் ஹூதொங்கைச் சுற்றிப்பார்க்கலாம். இத்தகைய வாகனம் மூலம் ஹூதொங்கில் சுற்றுலா மேற்கொள்வது வசதியானது. அது மட்டுமல்ல, ஹூதொங்கை நுணுக்கமாகப் பார்வையிடலாம் என்று ஜெர்மன் பயணி Gunter wein கூறினார். அவர் மேலும் கூறுகிறார்,

இது போன்ற வாகனங்களை இந்தியாவில் கண்டேன். அவை மிகவும் வசதியானவை. ஹூதொங்கில் சுற்றுலா செல்வதற்கு மிகவும் பொருத்தமானது. இத்தகைய வாகனம் மூலம், ஹூதொங்கிலுள்ள அனைத்து மூலைகளுக்கும் செல்ல முடியும். வாடகை கார் மூலம் இவ்வாறு செல்ல முடியாது. ஹூதொங் மிகவும் நல்லது. அது, பெய்ச்சிங்கின் தனிச்சிறப்பு. உயரமான கட்டிடங்கள் மற்றும் வணிகப் பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பழைய பெய்ச்சிங்கின் ஹூதொங்கைப் பார்வையிட நீங்கள் மேலும் விரும்புகிறீர்கள் என நான் நினைக்கின்றேன் என்றார். சீன சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் அதிகாரி சாங்சொ கூறியதாவது,

முந்தைய ஹூதொங் சுற்றுலாவின் போது, பயணிகள் பொதுவாக,ஒரு குடும்பத்தைப் பார்வையிட்டனர்.அதற்கு 15 நிமிடம் அல்லது அரை மணி நேரம் தேவைப்படும். மிக அதிகமாக சுமார் ஒன்றரை மணி நேரம் மட்டுமே இருப்பார்கள். இதெல்லாம் சாதாரணமான காட்சி.ஆனால், தற்போது, ஒரு குடும்பத்தின் வீட்டில் ஒரு நாள் இரவு தங்கியிருந்தால், குடும்பத்தினருடன் ஆழமாகத் தொடர்பு கொள்ளலாம். பயணிகள் அறிந்துகொள்ள விரும்புவது பற்றி விசாரித்து தெரிந்துகொள்ளலாம் என்றார்.

இத்தகைய சுற்றுலாத் திட்டம், பெய்ச்சிங்கின் ஹூதொங் சுற்றுலா நிகழ்ச்சியில் புதிய முக்கிய இடம் வகிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.