• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-12 09:10:15    
வான் அஞ்சல் கடிதங்கள்

cri

சென்னை த.ஞானசேகரின் ஒலி. ஜனவரி நிகழ்ச்சிகள் பொங்கல் போல் இனித்தன. மாலை ஒலிபரப்பை மேம்படுத்துங்கள். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சவப்பண்ணை பற்றிய கட்டுரையில், தன உடலை மருத்துவமனைக்கு தானமாகக் கொடுத்த தில்லிப் பல்கலை தமிழ் பேராசிரியர் சாலை இளந்தினரையன் பற்றிக் குறிப்பிட்டது நன்றாக இருந்தது. தமிழ்ப் பிரிவில் சீன மாணவர்கள் தமிழ் கற்பது ஆர்வத்தினாலா? அல்லது ஆள் குறைவை நிரப்பவா? சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் சைவமா அசைவமா? என்ற உரை, ஊரோடு ஒத்துவாழ் என்ற பழமொழியை நினைவூட்டியது.

வாணி-- ஞானசேகரின் கருத்துக்கு நன்றி. தமிழ்ப் பிரிவுக்காக 4 சீன மாணவர்கள் தமிழ் கற்பது போல, மேலும் சில மொழிப் பிரிவிலும் சீன மாணவர்கள் அந்த மொழியைப் படிக்க சீன வானொலி ஏற்பாடு செய்துள்ளது.

ராஜா-- திருச்சி. ஜி. பிரபாகரனின் குரல் 387 மணி நேர ஒலிபரப்பு, 38 மொழிகளில் ஒலிபரப்பு, 20 லட்சம் கடிதங்கள்- உண்மையிலேயே உலகில் சீன வானொலி வரலாறு படைக்கின்றது. துறையூர் த. குறிஞ்சிக்குமரன் பேசுகின்றார்: உங்கள் குரல் நிகழ்ச்சியில் உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா, தமது பள்ளியில் மாணவர்களுக்கு சீன மொழி கற்றுத் தருவதாகக் கூறினார். அவருக்கு நன்றி.

வாணி—மொழியின் வழியில் உறவை வளர்க்கப் பாடுபடும் அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் ஒரு செய்தி. தமிழ் மூலம் சீனம்-2ஆம் தொகுதி கையடக்கப் புத்தகமாகத் தயாராகின்றது. விரைவில் நேயர்களின் கரங்களில் தவழும்.

ராஜா-- கண்டமங்கலம் முஜிபுர் ரஹ்மான் ஜனவரி 12 நலவாழ்வுப் பாதுகாப்பு பகுதியில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு போன்ற தொல்லைகள் பற்றி கூறப்பட்டது நல்ல தகவல் என்கிறார். திருச்சி மாவட்டம் துறையூர் ஆர். வினோத் குமார். ஒரு பொறியியல் மாணவர்- என் போன்ற இளைஞர்கள் உலக நடப்புக்களை அறிந்து கொள்ள சீன வானொலியின் செய்திகள் உதவுகின்றன. சீனக்கதையும் பிடித்திருக்கின்றது என்கிறார். புதுவை பெரிய காலாப்பட்டு பி.சந்திரசேகரன்- ஒவ்வொர் ஆண்டிலும் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் மாற்றி அமைக்கப்படுவதால் நிகழ்ச்சிகள் ஆண்டுக்கு ஆண்டு புதுப்பொலிவு பெறுகின்றன என்கிறார். ஈரோடு ரெ.புண்ணியகுமார்-சீனாவில் மக்களின் கடுமையான உழைப்பு எனக்குப் பிடிக்கும். எவ்வளவு நேரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்? பள்ளியில் படிக்கும் போதே உழைப்பைக் கற்றுத் தருகின்றார்களா என்று வினா எழுப்புகின்றார்.

வாணி--- புண்ணியகுமார் எழுப்பிய வினாக்களுக்கு விடை—சீனாவில் வேலை நேரத்தை தொழிலாளர்கள் வீணாக்குவதில்லை. வேலை நேரத்தில் வேலை. ஓய்வு நேரத்தில் ஓய்வு என்ற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றது. மாணவர்களுக்கு தொழிற் கல்வியும் கற்றுத் தரப்படுகின்றது. நிறைய மாணவர்கள் வார விடுமுறை நாட்களில் வேறு கல்வி கற்கின்றனர். மற்ற நேயர்களின் கருத்துக்களுக்கு நன்றி.