
ஹார்பின் நகரம்
சீனாவின் வட கிழக்கில் அமைந்துள்ள ஹெய்லுங்சியாங் மாநிலத்தின் தலைநகரம் ஹார்பின். இது, ரஷியாவை ஒட்டி அமைந்துள்ளது. எனவே ரஷிய மணம் கமழ்கின்றது. சீனாவை அன்னப் பறவையாக வர்ணித்தால், அதன் கழுத்தில் ஒளிவீசும் முத்து என, ஹார்பின் நகரை அழைக்கலாம்.

ஹார்பின் நகரம்
வேறுபட்ட பண்பாடுகளின் கலவை காரணமாக, சீனாவின் இதர பல நகரங்களிலிருந்து ஹார்பின் வேறுபடுகின்றது. ஹார்பின் நகரில், வேறுபட்ட பாணிகளில் கட்டியமைக்கப்பட்ட மேலை நாட்டுக் கட்டடங்கள் உண்டு. சீனப் பாணிக் கட்டடங்களும் உண்டு. எனவே, சீன மற்றும் மேலை நாட்டுக் கட்டிடக் கலை ஒன்றிணையும் தனிச்சிறப்பை இங்கு உணரலாம்.

ஹார்பின் நகரம்
இந்நகரில், மரபுவழிப்பட்ட மேலை நாட்டு உணவகங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, 100 ஆண்டு வரலாறுடைய ஹுவாமெய் உணவகத்தில் பாரம்பரிய ரஷிய உணவைச் சுவைக்கலாம். ரஷிய உணவுப் பண்பாட்டினால், ஹார்பின் நகரில் இதற்கு வாய்ப்பு உண்டு.
|