
தெற்மேற்கு சீனாவின் குவைசு மாநிலத்தில் வாழும் மியேள இன பெண்கள் தலைமுறை தலைமுறையாக, துணியில் செய்துவரும் பூவேலைகள், சீன நாட்டுப்புற கலைகளில் குறிப்பிடத்தக்கவை. ஆனால், சமூக நவீனமயமாக்க வளர்ச்சியுடன், இந்த பழைய தொழில் நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. மியேள இனச்சேர்ந்தவர் சாங் சுன்யிங் அம்மையார், பூவேலை செய்யும் தொழில் நுட்பத்தை நன்றாக அறிந்தவர் மட்டுமல்ல, அதை, வளர்ப்பதில் மாபெரும் பங்காற்றியுள்ளார்.

மியேள இனம், குவைசு மாநிலத்தில் குழுமிவாழும் சிறுபான்மை தேசிய இனமாகும். அவர்களின் வாழ்க்கையில், பூவேலை செய்யும் தொழில் நுட்பம், பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. அவர்களின் அன்றாட உடைகளிலும், பயன்பாட்டுப் பொருட்களிலும் அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மியேள இன பெண்கள், 7 அல்லது 8 வயது முதல், பூவேலை செய்வதைக் கற்றுக்கொள்ள வேண்டும். 14, 15 வயதில் சில நுட்பங்களில் தேர்ச்சி பெற்று விடுகின்றனர். எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த, சாங் சுன்யிங் கூறியதாதவது:
பெரிய நகரில், அறிவு இல்லாதவர்கள், அலட்சியம் செய்யப்பட்டனர். எமது மியேள இனத்தில், பூவேலை செய்யத் தெரியாதவர்கள், அலட்சியம் செய்யப்பட்டனர். இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறு வயதிலிருந்தே பூவேலை செய்வது மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.
|