• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-17 16:41:13    
அமெரிக்க நுகர்வோரின் நண்பன்-சீனா

cri

சீனாவுக்கு நன்றி!என்று நான் எழுதியுள்ளதை நானே நம்ப மாட்டேன். ஆனால், இது உண்மைதான். ஏனென்றால் சீனாவின் உற்பத்திப் பொருட்கள் நல்ல தரமுடையவை, அழகானவை என்பது மட்டுமல்ல மிகவும் மலிவானதாகவும் உள்ளன. இன்று, சீனா, அமெரிக்க நுகர்வோரின் மிக சிறந்த நண்பர்களில் ஒன்றாகும். என்னை போன்ற பல அமெரிக்கர்கள் இதை உணர்ந்துள்ளனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது.

சுமார், 6,7 ஆண்டுகளுக்கு முன் சீன உற்பத்தி பொருட்களை வாங்கிய போது நான் இதை அறிந்தேன். அப்போது, நான் அமெரிக்கத் தேசிய கார் காட்சியகத்திலிருந்து ஒரு கார் மாதிரியை ஆர்டர் செய்தேன். இப்பொழுது கூட இந்த மாதிரியிலிருந்து எந்த குறைபாட்டையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் விலை, ஏற்றியிறக்கல் கட்டணம் உட்பட மொத்த பத்து அமெரிக்க டாலராகும். இவ்வளவு சிறந்த உற்பத்திப் பொருளை வாங்கியுள்ளது குறித்து மிகவும் மனநிறைவு அடைகின்றேன். இயல்பாகவே, இந்த சீனத் தயாரிப்பின் பின்னணியில், ஒரு உண்மை கதை உண்டு. எனனிடம் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ஒரு CHAIN SAW இருந்தது. அதன் விலை அதிகம். ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்று எனக்கு தெரியாது. பின்னர், ஒரு பெரிய அங்காடியில், மிகவும் விருப்பமான ஒரு CHAIN SAW ஐக் கண்டுபிடித்தேன். இந்த உற்பத்திப் பொருள் உறுதியானது, அதன் முத்திரையும் புகழ்பெற்றது. விலை 99 அமெரிக்க டாலர் மட்டும். இந்த கருவி, சீனாவில் தான் தயாரிக்கப்பட்டது. நான் இதை உடனே வாங்கி, வீட்டுக் கொண்டுவந்து, பொருத்தினேன். பயன்படுத்துவதற்கு மிக வசதி. இது குறித்து நான் எவ்வளவோ மகிழ்ச்சி அடைந்தேன்.

என்னை போல பல அமெரிக்க மக்களுக்கும் இத்தகைய அனுபவம் உண்டு என்று நான் நம்புகின்றேன். இது, தற்போது நாங்கள் இருக்கும் சூழ்நிலைக்கு அவ்வளவு இசைவாக இல்லை என்பது போல் உள்ளது. ஏனென்றால், சீனாவுடனான அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறை மிக அதிகம் என்று அமெரிக்க செய்தியேடுகள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்துவருகின்றன. அமெரிக்காவிடமிருந்து சீனா வாங்கிய பொருட்களைவிட சீனாவிலிருந்து அமெரிக்கா வாங்கிய பொருட்கள் அதிகம். இது உண்மைதான். ஆனால், சீனாவுக்குத் தேவையான பொருட்களை அமெரிக்கா வழங்கியுள்ளதா, போயிங் விமானம், அவரை, வெட்டு மரங்கள் ஆகியவை தவிர, சீனாவுக்கு வேறு என்ன பொருட்களை அமெரிக்கா வழங்க முடியும். அமெரிக்கா வழங்கிய பொருட்களின் பட்டியல் நீளமாக இருக்காது என்று நான் நினைக்கின்றேன்.

சீனத் தயாரிப்பு என்ற முத்திரையுடைய உற்பத்திப் பொருட்கள் அதிகமாக சீனாவில் பொருத்தப்பட்டதாக இருக்கலாம் என்றும் அதன் உதிரி பாகங்கள் இதர நாடுகளில் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் தற்போது மக்கள் ஏற்கனவே அறிந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சீனக்கார்கள்

சீனாவுக்கு கிடைத்த அவ்வளவு அதிக பணம், எதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகை பாதுகாப்பான முதலீட்டு செயல் என்ற முறையில் சீனா இந்த பணத்தைக் கொண்டு அமெரிக்காவின் அரசு பத்திரத்தை வாங்கியுள்ளது. சீனாவின் இந்த செயலினால்தான் அமெரிக்காவின் வரவுச்செலவு பற்றாக்குறை குறைந்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம்தானே. ஆனால் அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்கள் இருவர், இப்படி நினைக்க மாட்டார்கள். மிதமான மாற்று விதித முறைமையை நடைமுறைப்படுத்துமாறு அவர்கள் சீனாவிடம் கேட்டுகொண்டார்கள். நுகர்வோர்களான நாங்கள், சீனப் பொருட்களை வாங்கும் போது முன்பைவிட அதகிமான பணம் செலவழிக்க நேரிட்டது என்று இது பொருட்படுகின்றது.

அவர்களுக்கு மனநிறைவை சீனா தராவிட்டால், சீனாவிலிருந்து வரும் வணிகப் பொருகளுக்கு அதிக சுங்க வரியை வசூலிக்க வேண்டும் என்று அவர்கள் செனெட் அவையில் முன்மொழிப்பார்கள். 2003ஆம் ஆண்டு அவர்கள் இத்தகைய ஒரு வரைவுத் தீர்மானத்தை முன்வைத்தனர். நல்ல வேளை அந்த வரைவுத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இந்த இரண்டு செனெட் அவை உறுப்பினர்கள் உடனே நடவடிக்கை எடுக்க போவதில்லை என்ற போதிலும், அவர்களின் முன்மொழிவை சீனா ஏற்றுக்கொள்ள மறுக்குமேயானால், அடுத்த திங்கள் இந்த வரைவுத் தீர்மானத்தை மீண்டும் முன்வைக்க உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அன்புள்ள வாசகர்களே, நீங்களே பாருங்கள், அவர்கள் இறுதியில் என்ன செய்வார்கள் என்று கட்டுரையை எழுதியவர் கேள்வி எழுப்பினார்.