• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-17 22:06:38    
பல்வேறு நாடுகளின் விளக்கு விழாக்கள்

cri
இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுவது போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் பல்வகை விளக்கு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இப்போது மியான்மர், தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கொண்டாடப்படும் விளக்கு விழாக்களைப் பார்ப்போம்.

மியான்மர் நாட்டில்

இந்நாட்டின் விளக்கு விழா புத்த மதத்துடன் தொடர்புடையது. மியானமர் நாள் காட்டியின் படி 7வது திங்கள் பெளர்ணமி நாளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அன்று புத்தர் சாக்கியமுனி தேவலோகத்தின் வாழ்க்கையை முடித்துக்கொண்டு மண் உலகிற்கு அன்பு வழிகளைப் பரப்பத்துவங்கினார். மண் உலகிற்கு வரும் புத்தரை வரவேற்கும் வகையில், மக்கள் பல வண்ண விளக்குகளையும் மெழுகுதிரிகளையும் ஏற்றி விழாவைக் கொண்டாடி மகிழ்வார்கள்.

தாய்லாந்தில்

தாய்லாந்தின் ஆற்று விளக்கு திருநாள், ஆற்று கடவுளை வழிபாடும் திரு நாளாகும். தாய்லாந்து நாள் காட்டியின் படி 12வது திங்களில் சுகொதாய் வமிசக்காலத்தின் ஆசை நாயகி சியொப்பமா ஆற்று கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வாழை இலையால் தாமரை வடிவ விளக்கு தயாரித்தார். அதில் நறு மண குச்சிகளையும் மெழுகுவர்த்தினிகளையும் கொளுத்தினார். இவ்வாறு ஆற்று கடவுளுக்கு வழிபாடு செய்தார் என வரலாறு கூறுகிறது. பின்னர், தலைமுறை தலைமுறையாக பரவி வரும் இப்பண்டிகை வரும் போதெல்லாம் மக்கள் ஆற்று விளக்குகளைக் கண்டு ரசிக்கிறார்கள்.

ஜெர்மனியில்

ஜெர்மனியின் மத்திய தென் பகுதியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாடுகளிலும் ஒரு வகை விளக்கு விழா கொண்டாடப்படுகிறது. புனிதமார்ட்டின் விழா என அழைக்கப்படுகிறது. மார்ட்டின் போர் வீரராக போரிட்ட போது, ஏழை மக்களின் உயிரை காப்பாற்றினாராம். கி.பி.371ம் ஆண்டில் கிரிஸ்துவ மதத்தின் பிஷப்பாக பணியாற்றினார். அவர் இயற்கை எய்திய பின், புனிதராகவும் பாதுகாவலராகவும் விளங்கினாராம், அவரை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் திங்களின் முற்பகுதியில் குறிப்பிட்ட ஒரு நாள் "சென் மார்தின் விழா"என கொண்டாடப்படுகிறது. பல்வேறு நகரங்களிலும் விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். விழா நாள் இரவு விளக்கு ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.