• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-20 19:46:38    
குவன்மிங் நகரின் சிற்றுண்டி

cri

தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தலைநகர் குவன்மிங், பண்டை காலம் தொட்டு, வசந்த நகரமென அழைக்கப்பட்டுவருகின்றது. வட சீனாவில் உறைபனி பெய்யும் குளிர் காலத்தின் போது தென் மேற்கிலுள்ள குவன்மிங் நகரில் மித வெப்பமாக இருப்பதால் குளிர் இல்லாத வசந்த காலம் போல உணரப்படுகின்றது.

தற்போது, சுற்றுலா செல்வதற்கு ஏற்ற பருவம். வாருங்கள் செல்வோம் குவன்மிங் நகர்.

குவன்மிங் நகரிலுள்ள சைய்ஹு ஏரிக்கு, ஆண்டுதோறும் டிசெம்பர் திங்கள் முதல் அடுத்த ஆண்டின் மார்ச் திங்கள் வரை, குளிரில் இருந்து தப்பிப்பதற்காக சிவந்த அலகுடைய பறவைகள் கூட்டம் கூட்டமாக, வெகு தொலைவிலுள்ள வட பகுதியிலிருந்து வருகின்றன.

இந்த 4 திங்கள் காலத்தில் குவன்மிங் மக்கள் பலர் தினமும் ஏரிக்குச் சென்று அந்தப் பறவைகளுக்குத் தீனி போடுகின்றனர்.

மனிதரும் பறவையும் இணக்கமாக வாழும் இந்த நிலைமை, வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை மனமுருக்கியுள்ளது. அவர்களில் பலர், தங்களது வேகவேகமான வாழ்க்கை முறையை மாற்றி, காலையில் எழுந்ததும் ஏரிக்குச் சென்று, இப்பறவைகளுக்குத் தீனி போடுகின்றனர்.

மத்தியானத்திலும் இரவிலும் சிற்றுண்டி கடைகளிலோ தேநீர் கடைகளிலோ அமர்ந்து பேசிக்களித்து பொழுது போக்குகின்றனர்.

வேறுபட்ட உணவு வகைகள், குவன்மிங் நகர மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாகும்.

சீனாவில், யுன்னான் மாநிலம் விலங்குகள் மற்றும் தாவர வகைகள் மிக அதிகமாக இருக்கும் வட்டாரங்களில் ஒன்றாகும். குவன்மிங் நகரில் ஏராளமான சிற்றுண்டி வகைகள் உள்ளன.

பாதுகாக்கப்பட்டுள்ள அரிய விலங்கு வகைகள் தவிர, வானத்தில் பறக்கும் பறவைகள், நிலத்தில் விளையும் காய்கறிகள், நீர் வாழ்வன உயிரினங்கள் உள்ளிட்ட, அனைத்துமே குவன்மிங் நகர மக்களின் உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

சீனாவின் உணவுப் பண்பாடு பற்றி பலருக்குத் தெரியும். அதாவது, சீனாவின் காய்கறிகள், வெவ்வேறு வட்டாரங்களுக்கு ஏற்ப பல தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஷான்துங், சுச்சுவான், குவாங்துங், புச்சியன், கியாங்சு, செக்கியாங், ஹுனான், ஆன்ஹுய் ஆகிய மாநிலங்களின் காய்கறி வகைகள் மிகவும் புகழ்பெற்றவை. மக்கள் அடிக்கடி கூறும் 8 தொகுதி காய்கறி வகை இதுவே.

இவ்வற்றில் யுன்னான் காய்கறி வகை இடம்பெறவில்லை என்பதை நீங்கள் உணரக் கூடும். யுன்னான் காய்கறி வகைக்குத் தனிச்சிறப்பு இல்லை என்று பொருளா?

இது பற்றி சீன மக்களிடையில் ஒரு கூற்று நிலவுகின்றது. அதாவது, தனிச்சிறப்பு இல்லை என்பதே, யுன்னான் காய்கறி வகையின் தனிச்சிறப்புதான்.

இவ்வார்த்தை கேட்கும் போது ஏதோ ஒரு மாதிரியாக உள்ளது. ஆனால், குவன்மிங் நகரவாசி வாங்யுலின் கூறியதைக் கேட்ட பிறகு உண்மை புரிந்தது. அதாவது, யுன்னான் காய்கறிக்கு ருசியில்லை என்பதற்குப் பதிலாக, அது மிகவும் சுவையானது என்று பொருள்படுகின்றது.வாங்யுலின் கூறியதாவது,

எங்கள் யுன்னான் காய்கறி வகை, சீனாவின் 8 தொகுதி காய்கறி வகையில் சேரவில்லை என்ற போதிலும், அது பல்வேறு தொகுதி காய்கறி வகைகளின் அனைத்து தனிச்சிறப்புகளையும் கொண்டிருக்கின்றது.

இந்தக் காய்கறிகளைக் கொண்டு சமைக்கப்படும் சிற்றுண்டியும் அப்படியே. எடுத்துக்காட்டாக, சுச்சுவான் மாநிலத்தின் கறிவகைகளிலும் சிற்றுண்டியிலும் காரம் அதிகம்.

குவாங்துங் மாநிலத்தின் உணவு வகைகளில் இனிப்பு அதிகம். ஷான்துங் மாநிலத்தின் காய்கறிகளில் உப்பும் இனிப்பும் கொஞ்சம் அதிகமாக உள்ளன என்றார்.