• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-19 09:05:15    
காணாமல் போன பீகிங்மனிதன்

cri

பெய்ச்சிங் நகருக்குத் தென் மேற்கே 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Zhou Kou Dian மலைப்பகுதி. 1929 டிசம்பர் இரண்டாம் நாளில் இருந்து இந்த மலைப்பகுதி உலகப்புகழ் பெற்று விட்டது. இங்கு அந்த நாளில் ஒரு மனித மண்டை ஓட்டை சீனத் தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். அந்த மண்டை ஓட்டுக்கு பீகிங்மனிதன் என்று பெயரிட்டனர்.

5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த பீகிங்மனிதன், நெருப்பின் பயனை அறிந்த பூர்வகுடிமனிதன் என்று நம்பப்படுகிறது. அதற்குச் சான்றாக இந்த பீகிங்மனிதர்கள் வசித்த குகைகளுக்கு அருகில் சாம்பலும், எரிக்கப்பட்ட பிராணிகளின் எலும்புகளும் கிடைத்துள்ளன. மனிதனின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு ஆதாரமான இந்த மண்டை ஓடும், விலங்குகளின் எலும்புகளும் புதைபடிவ ஆய்வு வரலாற்றில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டை ஓடுகளும், பீகிங்மனிதன் தொடர்புள்ள இதர புதைபடிவப் பொருட்களும் 1941ஆம் ஆண்டில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான மறுமலர்ச்சிப் போப் நடந்த காலத்தில் காணாமல் போயின. அவை எப்படி மறைந்தன? இப்போது எங்கே இருக்கின்றன என்பது இது நாள் வரை புரியாத புதிராகவே இருக்கிறது.

இழந்து விட்ட இந்த நாகரிகத்தை தேடிக்கண்டுபிடிப்பதற்காக, ஒரு குழுவை சீன அரசு அண்மையில் நிறுவியுள்ளது. இந்தக் குழு, தேடப்படும் புதைபடிவங்பொருட்களில் பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது. காணாமல் போன தொல்பொருட்கள் பற்றி இப்படியொரு முழுமையான பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.

புகழ் பெற்ற பீகிங்மனிதர்களின் மண்டை ஓடுகள், பீகிங் மனிதர்களின் நூற்றுக்கணக்கான பற்கள் மற்றும் எலும்புகளின் புதைபடிவங்கள், Zhou Kou Dianஇல் அகழ்ந்து எடுக்கப்பட்ட 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய மலைக்குகை மனிதர்களின் புதைபடிவங்கள் ஆகியவை இந்த பட்டியலில் உள்ளன.

இந்தக் குழு தனது தேடவைத் துவங்கிய ஜுலைத் திங்களில் இருந்து காணாமல் போன பொருட்களின் 63 தடயங்கள் பற்றிய தகவல்கள் நாடெங்கிலும் இருந்து வந்துள்ளன என்று Zhou Kou Dian மலை அமைந்துள்ள Fang Shan மாவட்ட பண்பாட்டுக் குழுவின் தலைவர் Liu Yajun கூறினார்.

இரண்டாவது உலகப் போரின் போது, ஜப்பானியப் படை யெடுப்பாளர்கள் இந்த விலை மதிப்பற்ற தொல் பொருட்களை சூறையாடாமல் தடுப்பதற்காக, இந்தப் புதை படிவங்களை அமெரிக்காவுக்கு அனுப்ப சீன விஞ்ஞானிகள் திட்டமிட்டதாகவும், இவ்வாறு இன்னொரு நாட்டிற்கு அனுப்பப்பட்ட போது இவை காணாமல் போய் விட்டன என்றும் அவர் கூறினார்.