• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-20 19:43:29    
சீனாவின் புகழ் பெற்ற வீரர் வாங் லி ச்சின்

cri

சீனாவின் புகழ் பெற்ற மேசை பந்து விளையாட்டு வீரர் வாங் லி ச்சின் 6 வயது முதல் மேசை பந்து விளையாடத் துவங்கினார். 1991ஆம் ஆண்டில் ஷாங்கை மாநகர மேசை பந்து அணியில் சேர்ந்தார். 1993ஆம் ஆண்டு தேசிய அணியில் சேர்க்கப்பட்டார். இவர் பந்தடிக்கு சாட்டையைக் குறுக்காக பிடித்து விளையாடுபவர். இவர் அடித்த பந்து மிகவும் வேகமாக சுழல்கின்றது. 2000ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மேசை பந்து போட்டியில் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

2001ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் ஆடவர் ஒற்றையர் இரட்டையர் ஆகிர இரண்டு நிகழ்ச்சிகளில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2005ஆம் ஆண்டு ஷாங்கையில் நடைபெற்ற 48வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் மீண்டும் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தையும் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.

1995ஆம் ஆண்டு நடைபெற்ற உலக 17 வயதுக்குட்பட்ட இளைஞர் போட்டியில் இவர் ஆடவர் ஒற்றையர் சாபியன் பட்டம் பெற்றார். இதே ஆண்டில் நடைபெற்ற சீனத் தேசிய சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இவர் இரண்டாம் இடம் பெற்றார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மேசை பந்து ஒட்டுமொத்த இறுதிப் போட்டிகளில் இவர் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

1999ஆம் ஆண்டு சர்வதே மேசை பந்து ஒட்டு மொத்த இறுதிப் போட்டிகளில், இவர் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார். 2000ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இவர் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார். டென்மார்கில் நடைபெற்ற ஒப்பன் போட்டியில் இவர் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் வென்றார்.

2001ஆம் ஆண்டு 46வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் இவர், ஆடவர் குழு போட்டி, ஆடவர் ஒற்றையர் போட்டி, ஆடவர் இரட்டையர் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளில் சாம்பியன் பட்டம் பெற்றார். 2003ஆம் ஆண்டு 47வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார். 2004ஆம் ஆண்டு 47வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழு போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் பெற்றதில் இவர் முக்கிய பங்காற்றினார்.