18.12.2005ம் தேதியன்று நடைபெற்ற சீன வானொலியின் நேயர்கள் கருத்தரங்குபற்றி நாமக்கல், பரமத்தில் வேலூர் நேயர் வே.ம. தமிழரசு எழுதியிருக்கிறார். நிகழ்ச்சிகள் அருமையாக அமைந்தன, மதிய உணவு ருசியாக இருந்தது, மிகச்சிறப்பாக சேந்தமங்கலம் எஸ்.என்.ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார், அவருக்கு பாரட்டுக்கள். மேலும் திரு.கடிகாசல்ம், ராசிபுரம் பாலுவின் துணைவியார் ஆகியோரும், நண்பர்கள் பலரும் நயம்பட நல்ல கருத்துக்களை நவின்றனர். சீனாவிலிருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதைத் தவிர எக்குறையும் இல்லை என்று எழுதியுள்ளார். இக்கருத்தரங்கில் தன்னால் கலந்து கொள்ளமுடியதபோது இதன் ஒலிப்பதிவை வானொலியில் கேட்டு மகிழ்ந்த நீலகிரி மாவட்டம் கீழ் குந்தா நேயர் திரு. கே.கே.போஜன்,இதுகுறித்து எழுதுகையில்...நிகழ்ச்சியில் 145 பேர் கலந்து கொண்டதையும், 1963 ஆகஸ்ட்டில் ஒலிபரப்பு துவங்கப்பட்டது,சீன நேயர் மன்றம் 1986ல் துவக்கப்பட்டது என்பது போன்ற செய்திகளை அறியமுடிந்தது.
வாணி: மகிழ்ச்சி, நேரில் கலந்துகொள்ளமுடியாதவர்கள் அறிந்துகொள்ளவே கருத்தரங்கின் நிகழ்வுகள் ஒலிபரப்பட்டன. இதை கேட்டு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
க்ளீட்டஸ்: அடுத்து, 5.12.2005 அன்று எழுதிய கடிதத்தில் வரலாற்றுப் பார்வையில் சீன வானொலியின் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளார், சென்னை, மணலிப் புதுநகர் நேயர். தங்க. சங்கரப் பாண்டியன். புதந்தோறும் ஒலிபரப்பாகும் கேள்வி பதில் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக உள்ளது. ஆரம்ப காலங்களில் சீனாவைப் பற்றி மேலும் அறிய விரும்பும் நேயர்களது விருப்பத்தை பூர்த்தி செய்வதறகாக தொடங்கப்பட்டது காலப்போக்கில் சீனாவை அறிமுகப்படுத்தும் புதிய நிகழ்ச்சிகள் புதிய தலைப்புகளில் சேர்த்துக்கொள்ளப்பட்டன, பின் நேயர்கள் மற்றும் நேயர் மன்றங்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபின் ஒல்பரப்பாளர்களும் நேயர்களும் மனந்திறந்து கலந்துரையாடும் நிகழ்ச்சியாக வளர்ந்தது. நேயர்களை மகிழ்விக்கும் இந்நிகழ்ச்சியை உள்ளன்போடு வரவேற்கிறேன் என்று எழுதியுள்ளார். ஜனவரி 3 மற்றும் 4 நாட்களில் ஒலிபரப்பான புத்தாண்டு நிகழ்ச்சிகளை செவிமடுத்த மதுரை அண்ணா நகர் நேயர் திரு. என். ராமசாமி...இதில் நகர்வலம் என்று புதுமையான நிகழ்ச்சியை சேர்த்தமைக்கு திரு.ராஜாராமுக்கு பாராட்டு கூறியதோடு, நிகழ்ச்சியில் ஊனமுற்றோர் நலன் காப்பு, கண்பார்வையற்றோர்க்கு ஒளிமையமான வாழ்வு என்பது போன்ற கருத்துக்கள் சிறப்பாக அமைந்ததாக கூறியுள்ளார்.
வாணி: க்ளீட்டஸ், இந்த நிகழ்ச்சித் தொடர்பாக நேயர் போஜனும் எழுதியிருந்தார் அல்லவா?என்ன எழுதியுள்ளார் என்று சொல்லுங்களேன்.
க்ளீட்டஸ்: ஊனமுற்ற நமது உடன் பிறப்புகள் மனம் நோகாமல் நல்லதொரு நிகழ்ச்சியை சீன வானொலி படைத்து உண்மையான புத்தாண்டை கொண்டாடியுள்ளது என்று குறிப்பிட்ட போஜன், தமிழகத்தில் சக்தி மசாலா என்ற நிறுவனம் காவல் முதல் பேக்கிங் செய்வது வரை தனது அனைத்து பணிகளுக்கும் ஊனமுற்றவர்களையே பணியமர்த்தி மாநில மற்றும் நடுவனரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, இந்நிறுவனத்தின் உரிமையாளரை சீன வானொலியின் நேயர்கள் அனவரின் சார்பாக நன்றியை தெரிவிக்க கடமைப்படுள்ளதாக எழுதியுள்ளார்.
வாணி: உண்மையிலேயே பாராட்டவேண்டிய விடயம் தான். சமூக அக்கறைக் கொண்ட இத்தகைய நிறுவனங்களும், மனிதர்களும் இன்றை சமுதாயத்திற்கு அவசியமானவர்கள். இத்தகவலை கூறிய நேயர் போஜனுக்கு நன்றிகள்.
|