• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-19 09:05:15    
என்னைக் காணவில்லை

cri
ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு காவல்காரன் இருந்தான். அவனுடைய ஞாபக மறதி உலகப் பிரசித்தம் பெற்றது. ஒரு நாள் தண்டிக்கப்பட்ட ஒரு பௌத்த துறவியை சிறையில் கொண்டு போய் அடைக்க வேண்டிய பொறுப்பு அவன் தலையில் விழுந்தது. புறப்படுவதற்கு முன்னால் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு பட்டியல் போட்டான். பிறகு எதையும் மறந்து விடக் கூடாது என்பதற்காக மனப்பாடம் செய்யத் தொடங்கினான். "சாப்பாட்டுப் பொட்டலம், குடை, விலங்கு, கேஸ் கட்டு, சன்னியாசி, நான்" என்று ஒவ்வொன்றாகக் கூறி நெட்டுருப் போட்டான். இவற்றை திரும்பத் திரும்ப சொல்லியபடியே துறவியை இழுத்துக் கொண்டு புறப்பட்டான். பௌத்த துறவிக்கு ஒண்ணும் புரியவில்லை, "இவன் எதுக்காக வாய்க்குள்ளேயே முணுமுணுக்கிறான்?" என்று நினைத்தபடியே, "அய்யா, காவல்காரரே! எதுவும் காத்து கருப்புக்கு பயந்து மந்திரம் சொல்றீரா?" என்று கேட்டான்.

"அட பைத்திரயக்காரா! நானாவது, காத்து கருப்புக்கு பயப்படுற தாவ வது? எவ்வளவு பெரிய வேலை எனக்கு கொடுத்துருக்காங்க. எதையும் மறந்துரக் கூடாது பாரு. அதான் செய்ய வேண்டியதை ஒவ்வொண்ணா நினைச்சிப் பார்த்துக்கிடுதேன்" என்றான் காவலன்.

"சரி, இந்த ஆளு தலையை ரொம்ப லேசா தடவிறலாம்" என்று முடிவுகட்டிய புத்தசாமியார், வழியில் இருந்த கள்ளுக்கடையை பார்த்ததும், "அய்யா, கொஞ்சம் தாககாந்தி செய்துட்டு போகலாமே, ஜெயிலுல இதெல்லாம் கிடைக்குமோ என்னேமோ நான் பணம் தர்றேன்" என்றான்.

காவலனுக்கும் சபலம். சரி என்று தலையசைத்தான். நல்ல போதை ஏறியதும், காவல்காரனை தலையை மொட்டையடித்து, கழுத்தில் விலங்கை மாட்டி விட்டு, புத்தசாமியார் தப்பியோடிவிட்டான்.

காவல்காரனுக்கு போதை தெளிந்து ஒவ்வொன்றாக சரிபார்க்கத் தொடங்கினான்.

சோத்துப் போட்டலம், குடை... ஆ... இங்க இருக்கு.

விலங்கு எங்கே போச்சி? தேடினான். கடைசியில் தன் கழுத்தில் இருப்பதை தடவிப் பார்த்து தெரிந்து கொண்டான். நல்ல வேளை விலங்கை என் கழுத்திலேயே மாட்டுனதால தொலையலை. ஆ! கேஸ் கட்டு கூட இங்கே இருக்குதே! ஆமா, இந்த சாமியார் பயல் எங்க போயி தொலைஞ்சான்? என்று யோசித்தபடியே தனது தலையைத் தடவினான். தலை நன்றாக மொட்டையடிக்கப்பட்டு வழுவழு என்றிருந்தது.

"ஆகா! இந்தா இருக்கான் சாமியார்" என்று சந்தோஷத்தில் குதித்தவனுக்கு ஒரு சந்தேகம்.

"ஆமா? நான் எங்கே போய் தொலைஞ்சேன்?"