வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில், உங்களை மீண்டும் மகிழ்ச்சியுடன் சந்தித்துள்ளேன்.
கடந்த முறை நாம் ஒரு புதிய உரையாடல் படித்தோம். நீங்கள் பயிற்சி செய்தீர்களா? எப்படி புரிந்ததா? புரியவில்லை என்றால் பரவாயில்லை. இப்பொழுது இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றோம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 26ஆம் பக்கத்தின் நடுப்பகுதியில் உள்ளது.
முதலில் இந்த உரையாடலை ஒரு முறை பாருங்கள்.
WO NENG BU NENG WAN DAO YI HUI ER?
BU NENG。
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு.
WO NENG BU NENG WAN DAO YI HUI ER?
நான் சற்று தாமதமாக வரலாமா?
BU NENG。
இல்லை, கூடாது.
இந்த உரையாடலில் உள்ள我 என்றால் நான் என்பது பொருள். NENG BU NENG என்றால், முடியுமா, இல்லையா என்பது பொருள். WAN DAO என்றால் தாமதமாக வருவது என்பது பொருள்.
YI HUI ER என்ற சொல்லின் பொருள் சற்று நேரம் என்பதாகும். BU NENG என்றால், முடியாது அல்லது கூடாது என்பது பொருள்.
இப்பொழுது ஒரு புதிய உரையாடலைப் பார்க்கின்றோம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 26ஆம் பக்கத்தின் கீழ் பகுதியிலும் 27ஆம் பக்கத்தின் மேல் பகுதியிலும் காணலாம்.
முதலில் இந்த உரையாடலை ஒரு முறை கேளுங்கள்.
WO NENG BU NENG ZUO ZHE ER?
NI BU NENG ZUO ZHE ER。
இந்த உரையாடலின் தமிழாக்கத்தை இப்பொழுது தருகின்றோம்.
WO NENG BU NENG ZUO ZHE ER?
நான் இங்கே உட்காரலாமா?
NI BU NENG ZUO ZHE ER。
இல்லை, கூடாது.
இந்த உரையாடலிலுள்ள WO என்றால் நான் என்பது பொருள். NENG BU NENG என்றால் முடியுமா இல்லையா என்பது பொருள். ZUO என்றால் உட்ருவது என்பது பொருள். ZHE ER என்றால் இங்கே என்பது பொருள்.
NI என்றால் நீ. BU NENG என்றால் இல்லை, கூடாது என்பது பொருள்.
இன்று நாம் இன்னொரு புதிய உரையாடலை பார்த்துள்ளோம். முன்பு படித்தது போல் வாக்கிய அமைப்பு அவ்வளவு வித்தியாசம் இல்லை. நன்றாக பயிற்சி செய்தால் கிரகித்துக் கொள்ளலாம். செய்வீர்களா?
|