• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-21 15:52:52    
கடந்த வார விளையாட்டுச் செய்திகள்

cri

பெய்சிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழாவுக்கான இயக்குநர் குழுவின் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குநர் சாங் யீ மோ தலைமை இயக்குநராகவும், சாங் ஜி காங்கும், சென் வெய் யாவும் துணை தலைமை இயக்குநர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான அமைப்புக் கமிட்டி இன்று இதை அறிவித்துள்ளது.

அதேவேளையில் உறுதிப்படுத்தப்பட்ட கலை ஆலோசகர் குழுவில் கிழக்கு இயல் நிபுணர் ஜி சியன் லின், தத்துவ அறிஞர் தாங் யி ஜே, ஓவியர் ஜின் சாங் யீ, இயக்குநர் சென் கை கோ உள்ளிட்ட சீனாவின் புகழ் பெற்ற கலைத் துறை பிரமுகளும், ஹாலிவுட் சிறப்பு இயக்குநர் STEVEN SPIELBERG உள்ளிட்ட சர்வதேச பிரமுகர்களும் இடம்பெறுகின்றனர்.

2008ம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள சர்வதேச கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான சோதனை நிகழ்வாக இந்த 11வது உலக இளநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமையும் என்று கூறப்படுகிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றெடுக்க இளம் வீரர்கள் வீராங்கனைகளை சீனா தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.

2005ம் ஆண்டின் உலகின் தலைசிறந்த முதல் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சீன அரச விளையாட்டுத்துறையின் தலைமை நிர்வாகம்,சீனஸ்போர்ட்ஸ் நாளேடு், நியு ஸ்போர்ட்ஸ் இதழ், பெய்சிங் ஷிடையாவ் கலாச்சார ஊக்குவிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உலகின் முதல் 10 தலைசிறந்த விளையாட்டு வீரர்களை தெரிவு செய்து விருதுகள் வழங்கியுள்ளன.

இதில் 3 சீன வீரர் வீராங்கனைகளும் அடக்கம்.
ஜிம்னாஸ்டிக்கில் வால்ட் பிரிவில் 2005ம் ஆண்டின் உலக சாம்பியன் செங் பேய், 2005 சீன ஒபென் மற்றும் யு.கே. சாம்பியன்ஷிப் ஸ்னூக்கர் விளையாட்டு வெற்றி நாயகர், டிங் சுன் ஹுய், ஸ்கீயிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர், லி நீ னா ஆகிய 3 சீனர்கள் தவிர்த்து பார்மூலா 1 கார் பந்தய வெற்றி வீரர் ஸ்பெயின் நாட்டு பெர்னான்டோ அலான்ஸோ, 2005ம் ஆண்டு சர்வதேச தடகள கூட்டமைப்புச் சங்கத்தின் சிறந்த தடகள வீராங்கனை போல் வால்ட் சாதனையாளர் ரஷ்யாவின் யெலேனா இசின்பயேவா, ஸ்விட்சர்லாந்து நாட்டின் டென்னிஸ் வீரர், வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வரும் ரோஜர் பெடரர், 2005ம் ஆண்டின் பேட்மின்டன்.

பூப்பந்து சாம்பியன் இந்தோனேஷியாவின் டாவ்பீக் இதாயத், அமெரிக்க தேசிய கூடைப்பந்து சாம்பியன், கடந்து ஆண்டின் சிறந்த வீரர் டிம் டங்கன், உலக கால்பந்தாட்டக் கழகத்தின் சிறந்த வீரர், பிரேசில் நாட்டு ரொனால்டின்யோ, 2005ம் ஆண்டின் உலக அளவிலான நீச்சல் போட்டியில் 5 தங்கங்களை வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ் ஆக மொத்தம் 10 விளையாட்டு வீரர்கள் 2005ம் ஆண்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் நடத்தும் 3 முக்கிய விளையாட்டுப் போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் திங்களில் முதன் முறையாக பெய்ஜிங்கில் நடத்தப்படவுள்ளன. 11வது இளநிலை தடகளப் போட்டி "வோர்ல்ட் ஜூனியர் சாம்பியன்ஷிப்" ஆகஸ்ட் 15 முதல் 20ம் நாள் வரை நடைபெறவுள்ளது. 160 நாடுகள் வட்டாரங்களைச் சேர்ந்த 2000திற்கும் அதிகமான தடகள விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

உலகக் கால்பந்து போட்டியில் முதல் பெண் நடுவராக நடுவராகும் வாய்ப்பு பிரான்ஸ் நாட்டின் நெல்லி வியென்னாவிற்கு கிடைத்துள்ளது. ஆண் நடுவர்களே பொதுவாக இடம்பெறும் உலகக் கால்பந்து போட்டிகளில் முதன் முறையாக ஒரு பெண் நடுவராக மாறும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. துணை நடுவர்களை தெரிவு செய்யும் தேர்வுகள் ஏப்ரல் 18ம் நாள் முதல் 21ம் நாள் வரையில் பிராங்பர்ட்டில் நடைபெறவுள்ளன. இதில் 82பேர் கலந்துகொள்கின்றனர்.இவர்களில் பிரெஞ்சு பெண்மணி நெல்லி வியென்னாவும் ஒருவர். இவர்களில் 60 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். இத்தேர்வில் வெற்றி பெற்றால் உலகக் கோப்பையில் நடுவர் பணியேற்கும் முதல் பெண்மணி ஆவார் நெல்லி வியன்னா.