• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-21 18:03:45    
Tianjin மருத்துவ கல்லூரியின் மாணவிகள்

cri

இந்தியக் குடியரசுத் திருநாளன்று பெய்ச்சிங் இந்தியத் தூதரகத்தில் நடந்த கொடியேற்று விழாவுக்குப் போயிருந்தேன். அப்போது திடுதிப்பென ஒரு இளைஞர் கூட்டம் உள்ளே நுழைந்தது. பெரும்பாளானவர்கள் நெற்றியில், சிறு சிறு கீற்றுக்களாகத் திருநீறு இவர்கள் தமிழர்கள் எனப் பறை சாற்றியது. என்னைக் கண்டதும் அவர்களின் முகங்களின் புன்முறுவல். அப்போது தூதரின் உதவியாளர் அரவிந்த் பாபு, இவங்க எல்லாம் டியன்ஜின் நகரில் மருத்துவம் படிக்கிறங்க என்று அறிமுகப்படுத்தினார். அன்றைய தினமே இதைப்பற்றி கலையரசியிடம் சொல்பி, அவர்களைப் பேட்டி காணலாமே என்ற போது உற்சாகமாக ஒப்புதல் கொடுத்தார். விசாரித்த போது மொத்தம் 47 மாணர்வர்கள் தமிழ் நாட்டில் இருந்து வந்து டியன்ஜின் மருத்துவப் பல்கலைகழகத்தில் மருத்துவம் படிப்பதாகத் தெரிந்தது. ஒரு திட்டம் போட்டோம். அதன்படி மார்ச் 19ம் நாள் நானும், வரணியும், விஜயலட்சுமியும் டியன்ஜின் நகருக்குப் பயணமானோர். டியன்ஜினில் மிகவும் புகழ்பெற்றது எது?என்று கேட்டபோது நாய் தின்னாத உணவு அதை உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என்றார் விஜயலட்சுமி சிரித்த படியே ஆச்சரியப்பட்டேன். ஆமாம், அதன் சுவை நன்றாக இருக்கிறது. முன்பு வணிகர் இதை விற்பனை செய்த போது, ஒரு வியப்பான பெயராக அழைக்க விரும்பினார். இப்படித்தான் நாய் கூட அதைத் தின்னாது. இதன் பெயர் கண்டதும் மக்கள் கடுமையாக சாப்பிட விரும்புகிறார்கள். நாளுக்கு நாள் இது புகழ்பெற்றது என்று விளக்கம் அளித்தார் வாணி.

பற்பல சிந்தனைகளோடு யிக்கிடாஷ் எனப்படும் மருத்துவப் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த போது கோயிலுக்குள் நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. விளையாட்டுத்திடல் அருகே போய் காரை நிறுத்தினோம். கிரிக்கெட் பந்தயம் நடந்து கொண்டிருந்தது. எங்களைக் கண்டதும் மாணவர் சந்திரன் காஞ்சிபுரத்துக்காரர் ஓடோடி வந்தார் நெர்றியில் திருநீறு துவங்க பல்கலைக் கழகத்தில் தமிழ் நாடு கேரளா, நேபாளம் இலங்கை, வட இந்தியா, பாகிஸ்தான் என்று பல கிரிக்கெட் அணிகள் இருப்பதாகவும் ஆண்டுக்கு ஒரு முறையே அவற்றிடையே தொடர் போட்டிகள் நடப்பதாகவும் சந்திரன் சொன்னார். அப்போது தோனி மாதிரியில் தலை முடிவளர்த்திருந்த ஒரு மாணவர் பந்தை ஓங்கி பவுண்டரிக்கு அடித்து விட்டு, ஓடி வந்தார் எங்களை நோக்கி அவர்தான் சென்னையைச் சேர்ந்த அலி, மெல்ல மெல்ல எல்லா மாணவர்களும் சேர்ந்து விட்டன்ர். பேசிக் கொண்டே மாணவியர் விடு நோக்கி நடந்தோம் நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்ய விஜயலட்சுமியும் வாணியும் தமிவ் சரளமாகப் பேசுவ்து கண்டு அவர்களுக்கு ஒரே உற்சாகம் உங்களைப் பார்த்ததும் தமிழ் நாட்டைப் பார்த்தது போல இருக்கு என்று நான்கொன்னதும் சந்திரன் இடை மறித்து, இவங்க தமிழ் பேசறதைக் கேட்டா எங்களுக்கு தமிழ் நாட்டுலேயே இருப்பது போல இருக்கு என்றார். சந்திரனும் அலியும் ஓரளவு சீன மொழியில் பேசியபடி வந்தனர். டியன்ஜினுக்கு வந்த 7 மாதங்களில் இந்த அளவுக்கு வியந்த வாணி, ராஜா, நீங்கள் வந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. உங்கள் சீன மொழி எப்படி என்று கேட்ட போது, வெட்கப்பட்டேன். அலுவலகச் சூழலில் எல்லோரும் தமிழ்மொழியில் என்னிடம் பேசும் போது எனக்கு சீனத்தில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படாம்ல் போகிறது. தேவைதானே கண்டு பிடிப்புக்களின் தாய்? பேட்டி தொடங்கியது. நான் மாணவர்களுடனும் வாணியும் விஜயலட்சுமியும் மாணவிகளுடனும் தனித்தனியாக உரையாடினோம். பேட்டி நடந்து கொண்டிருந்த போது சென்னையைச் சேர்ந்த அருணும், இன்னொரு நண்பரும் வேகவேகமாக வந்து நடுவில் சேர்ந்து கொண்டனர். மன்னிக்கணும் கார், நாங்க சர்ச்சுக்குப் போயிருந்தோம். தாமதமாயிருச்சு, என்று சொல்லி வருத்தப்பட்டார். ஞாயிற்றுக் கழிமைகளில் தவறாது சர்ச்சுக்குப் போவதாகச் சொன்னார்கள், டியன்வின் நகரில் சீனர்களுக்காக சீன மொழியில் வழிபாட்டுக் கூட்டம் நடைபெறும் ஒரு சர்ச்சம், வெளி நாட்டவர்களுக்காக ஆங்கிலத்தில் வழிபாடு நடக்கும் இன்னொரு சர்ச்சும் இருப்பதாகச் சொன்னார்கள். அப்போது அலி குறுக்கிட்டு, நான் வெள்ளிக் கழிமை தோலும் பகலில் தொழுகை நடத்த மசூதிக்குச் செல்கிறேன் அதற்காக முஸ்லிம் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி தருகிறார்கள் என்றார்.

அப்போது பிரியா என்ற மாணவி குறுக்கிட்டு, கார் சர்ச் இருக்கு மசூதி இருக்கு எங்களுக்குத்தான், இந்தக் கோயில் இல்லே. அதனால் என்ன, அறைக்குள்ளேயே சாமி கும்பிடுகிறோம். நெற்றியில் திரு நீறு பூசிக் கொள்கிறோம். அடிக்கடி புத்தார் கோயிலுக்குப் போகிறோம், என்றார். இதைக் கேட்ட போது, சீனாவில் மத சுதந்திரம் இல்லை என்று யாரோ ஒருவர் பிரச்சாரம் செய்வதாக நேயர்கள் சொன்னது நினைவுக் வந்தது. சீனாவைப் பற்றி, அரை குறையாகத்தெரிந்து கொண்டு, எப்படி இவர்களால் பொய் பிரச்சாரம் செய்ய முடிகிறது என்று மனதுக்குள் ஆச்சரியப்பட்டேன்.