• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-20 22:14:20    
வங்கியில் விளைந்த நெல்

cri

ஜப்பானில் நெல் முளைப்பது வயலில் அல்ல-வங்கியில் வியப்பாக இருக்கிறதா? பசோனா(PASONA)என்னும் ஜப்பானிய நிறுவனம் தனது வங்கி லாக்கரை ஒரு உயிரியல் ஆய்வுக்கூடமாக மாற்றியதன் விளைவாக, கயல்கள் துள்ளி விளையாடும் கழனியோ, ஆற்று நீர்ப்பாசனமோ, சூரிய வெளிச்சமோ இல்லாமல் நெற்பயிர் முளைத்து ஒரு வேளாண் புரட்சி அண்மையில் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜனவரி 11ம் நாள் இவ்வாறு செயற்கையாக வங்கியின் இருட்டறையில் விளைவிக்கப்பட்ட அறுப்பது கிலோ கோஷிகிகாரி ரக அரிசி அறுவடை செய்யப்பட்டது. இந்தச் சாதனை ஓரிரவில் நடைபெற்றுவிடவில்லை.

2004ம் ஆண்டு தொடங்கி பல சோதனைகள் நடத்தப்பட்டு, எண்ணற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகு இந்தச் சாதனை சாத்தியமானது. முதலில் பசோனா நிறுவனம் நோமுரா வங்கியில் உள்ள தனது பெரிய லாக்கரை மாற்றி வடிவமைத்து, கச்சிதமான செயற்கை வயலாக மாற்றியது. விபத்தோ பொறுமை மிக்கோரின் தாக்குதலோ இந்தச் சோதனையை பலியாக்கிவிடக் கூடாது என்பதற்காகப் பற்பலப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதலில் கீரை, தக்காளி போன்ற காய்கறிகள் புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர் வீச்சுக்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டன. நெற்பயிர் முளைத்த போது, தலைமை அமைச்சர் ஜுனிச்சிரோ கொய்சுமி வந்து பார்த்து வாழ்த்தினார். ஆனால், அந்தப்பயிர் சிலவாரங்களில் வாடி விட்டது. இவ்வாறு திரும்பத்திரும்ப செய்த சோதனைகள் தோல்வியில் முடிந்தன. பசோனா நிறுவனத்தின் தலைவர் யசுயுகிநம்பு, உயிரி நுட்ப நிபுணர்களை வரவழைத்துக் காட்டினார். அவர்கள் கூறிய ஆலோசனைகளைப் பின்பற்றிய போது, நெற்பயிர் பிழைக்க வில்லை. அப்போது தான் அனுபவம் மிக்க ஒரு முதிய விவசாயியை அழைத்தார் நிறுவனத்தின் தலைவர் யோஷிஹிகோ மொரிட்டா என்ற அந்த விவசாயி, கியோட்டோ நகருக்கு வெளியே வயலில் நாற்பது ஆண்டுகள் சாகுபடி செய்து அனுபவம் பெற்றவர்.

அவர் வங்கிலாக்கலில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நெல்வயலை வந்து பார்த்ததுமே என்ன பிரச்சினை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். காற்றும் மழையும் இல்லாத போது எப்படி நெற்பயிர் முளைக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

உடனே தொழில் நுட்ப நிபுணர்கள் வந்தார்கள். செயற்கை வயலுக்கு மேலே பெரிய பெரிய மின் வசிறிகளை நிறுவி ஓடவிட்டனர். தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவைப் பெருக்கி செயற்கை மழையாகப் பெய்யச் செய்தனர். ஒரு சாதாரண விவசாயி கூறிய யோசனை பயனளித்தது. 60 கிலோ நெல் விளைந்தது. வயல் வெளியில் விளைந்த அரிசியைப் போலவே, இந்தச் செயற்கை அரிசியும் சுவையாக இருக்கிறது என்று அந்த விவசாயி பாராட்டினார்.