• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-11 16:33:55    
யுன்னான் உணவு வகை

cri

இந்த உணவுக் கடையில் தொங்கவிடப்பட்டிருக்கும் உணவுப் பட்டியல் பலகையைப் பார்த்ததுமே சாப்பிடும் ஆசை ஏற்பட்டுவிடும்.

இந்த உணவுக் கடைகளிலுள்ள முக்கிய கறிகள் வேறுபட்டதாக இருந்த போதிலும், இவற்றில் கடந்த காலப் பேரரசருடன் தொடர்புடைய ஒரு கறி அனைத்து கடைகளிலும் உள்ளது. அதன் பெயர் தாச்சியுசியா.

சியா என்பது, பண்டை காலத்தில் பேரரசர் மீது மதிப்பு காட்டும் சொல்லின் சீன மொழி உச்சரிப்பு ஆகும். இந்தக் கறியினால் பேரரசர் காப்பாற்றப்பட்டார் என்பது இதற்குக் காரணம். இதற்கு ஒரு கதை உண்டு.

துவக்கத்தில் இக்கறியின் பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், மிங் வமிச காலத்தின் முடிவில், அதாவது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்கறி புகழ் பெறத் துவங்கியது என்று வழிகாட்டி லீ சியௌயு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, 

தாச்சியுசியா என்னும் கறி, யுன்னான் மாநிலத்தின் தங்சுவன் எனும் இடத்தில் ஒரு வகை உணவாக இருந்தது. வெந்த சோறை நன்கு பிசைந்து தயாரிக்கப்பட்ட ரொட்டி போன்ற உணவு, ழ் என்று அழைக்கிறோம்.

இதைத் துண்டு துண்டாக நறுக்கி, கீரை, இறைச்சி முதலியவற்றுடன் சேர்த்து வறுத்த பின்னர் தாச்சியுசியா எனும் உணவு கிடைக்கும்.

சிங் வமிச காலத்தின் துவக்கத்தில் மிங் வமிச காலப் பேரரசர் யுன்லியெ யுன்னான் மாநிலத்தின் மேற்கு பகுதிக்குத் தப்பிச் சென்றார். அப்போது, வானம் இருளாக இருந்தது. அவர்தம் குழுவினர் களைப்பாகவும் பட்டினியாகவும் இருந்தனர்.

ஓர் இடத்தைத் தேடி ஓய்வு எடுத்தனர். கடையின் உரிமையாளர், விரைவாகச் சமைப்பதற்காக வறுக்கப்பட்ட ழ் எனும் உணவைத் தட்டில் போட்டுப் பேரரசருக்குக் கொண்டுவந்தார்.

பேரரசர் யுலியென் இதைச் சாப்பிட்டுவிட்டு புகழ்ந்து பாராட்டினார். ழ் வறுவல் என் உயிரைக் காப்பாற்றியது என்றார் அவர்.

அப்போது முதல், தங்சுவன் வறுவல் ழ், தாச்சியுசியா என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த உணவகத்திலுள்ள அனைத்து சிற்றுண்டி கடைகளிலும் தாச்சியுசியா என்னும் உணவு இருந்த போதிலும், அவற்றின் தயாரிப்பு முறை வேறுபடுகின்றது.

சில கடைகளில், மாட்டிறைச்சி, தக்காளிப் பழம் முதலியவற்றை ழ் என்னும் உணவுடன் வறுத்தல் வழக்கம். சில கடைகளில் பன்றி இறைச்சி, காய்கறி முதலியவற்றுடன் வறுப்பதுண்டு. வேறு சில கடைகளில், இறைச்சி வகைகளைப் போடாமல் காய்கறி வகைகளுடன் மட்டுமே வறுப்பது வழக்கம்.

எப்படி இருந்தாலும் தாச்சியெசியா என்னும் உணவில் இடம்பெறும் முக்கிய உணவு ழ் அனைத்து உணவு கடைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

நாங்கள் அறிமுகப்படுத்திய குச்சியௌமிசியெ, தாச்சியுசியா ஆகியவை தவிர, இந்த உணவகத்தில் பொறித்த சோறும் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

உருளைக்கிழங்கு, இறைச்சி ஆகியவற்றுடன் சோறு பொறிப்பது, மாட்டிறைச்சியுடன் சோறு பொறிப்பது முதலிய உணவுகள் வேறுபட்ட சுவையுடையவை. தனிச்சிறப்பு வாய்ந்தவை. அத்துடன், ஒரு தட்டு பொறியல் சோறு விலை 5 யுவான் மட்டுமே.

இதனால், பயணிகள் பலர் இதைச் சாப்பிட விரும்புகின்றனர். சீனாவின் தென் மேற்கு எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள யுன்னான் மாநிலம், எழில் மிக்க இயற்கை காட்சித்தலமாகும். அங்கு, பல்வகைச் சிறுபான்மைத் தேசிய இனப் பழக்க வழக்கங்களும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த உணவுப் பண்பாடும் உள்ளன.

யுன்னான் மாநிலத்தின் சிற்றுண்டி சுவை மிக்கது. அவற்றில், குச்சியௌமிசியெ எனும் சிற்றுண்டி குறிப்பிடத்தக்கது. நூடுல்ஸ் போன்ற உணவு வகை அது. வாங்யுலின் மேலும் கூறுகிறார், குவன்மிங் உணவு வகைகளில் இந்தத் தனிச்சிறப்புகள் எல்லாமே அடங்கும்.

இதனால், பல பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் நாள்தோறும் இரவில் குவன்மிங் சிற்றுண்டி உண்ணுவது இன்றியமையாதது என்றார். வாங்யுலின் மேலும் கூறுகிறார், குவன்மிங் உணவு வகைகளில் இந்தத் தனிச்சிறப்புகள் எல்லாமே அடங்கும்.

குவன்மிங் நகரில் 4 பருவங்களும் வசந்த காலம் போன்றவை. கால நிலை மனிதருக்கு ஏற்றது. ஆண்டுக்குச் சராசரி வெப்ப நிலை 15 டிகிரி செல்சியஸ். மேற்கு சீனாவின் முக்கிய போக்குவரத்து இடமாகவும் தென் கிழக்காசியாவுக்குச் செல்லும் நுழைவாயிலாகவும் குவன்மிங் நகரம் திகழ்கின்றது.

குவன்மிங் விமான நிலையத்தில் ரங்கூன், பாங்க்கொக், சிங்கப்பூர் உள்ளிட்ட 6 சர்வதேச விமான நெறிகளும் ஹாங்காங் மற்றும் நாட்டின் பல்வேறு நடுத்தர, பெரிய நகரங்களுக்குச் செல்லும் 40 விமான நெறிகளும் உள்ளன. சுற்றுலா நகராக விளங்கிய போதிலும் குவன்மிங் நகரில் பொருட்களின் விலை அதிகமில்லை.

மேற்கூறிய சுவையான சிற்றுண்டி வகைகள் ஒவ்வொன்றுக்கும் பொதுவாகச் சுமார் 10 யுவான் மட்டுமே. நேயர்கள்! உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் குவன்மிங் நகருக்கு வாருங்கள்.