• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-27 16:20:15    
குச்சியௌமிசியெ எனும் சிற்றுண்டி

cri

சீனாவின் தென் மேற்கு எல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள யுன்னான் மாநிலம், எழில் மிக்க இயற்கை காட்சித்தலமாகும்.

அங்கு, பல்வகைச் சிறுபான்மைத் தேசிய இனப் பழக்க வழக்கங்களும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த உணவுப் பண்பாடும் உள்ளன. யுன்னான் மாநிலத்தின் சிற்றுண்டி சுவை மிக்கது.

அவற்றில், குச்சியௌமிசியெ எனும் சிற்றுண்டி குறிப்பிடத்தக்கது. நூடுல்ஸ் போன்ற உணவு வகை அது.

நகர மையப் பகுதியில் அமைந்துள்ள நான்பிங் வீதிக்கு அருகில் உணவகங்களும் கடைகளும் ஏராளமாக உள்ளன.

சுமார் 700 மீட்டர் நீளமுடைய நான்பிங் வீதி, இந்நகரில் மிகவும் விறுவிறுப்பான இடமாகும்.

இவ்வீதிக்கு எதிரேயுள்ள 3 மாடிகளைக் கொண்ட உணவகத்தில் சிற்றுண்டிக் கடைகள் நிறைந்துள்ளன. இவ்வுணவகத்தின் வெளித் தோற்றத்தைப் பார்க்கும் போது, அது சீனாவின் பாரம்பரிய நகரக் கோட்டை போன்று தெரிகிறது. 4 கதவுகள் உண்டு.

இவற்றில் ஒன்று, வீதியின் சந்தைக்கு அருகில் அமைந்துள்ளது. ஆகவே, பலர், வீதியில் நடந்துசென்ற பின்னர் இங்கு சாப்பிடுவது வழக்கம்.

யுன்னான் மாநிலத்தில் குச்சியௌமிசியெ எனும் சிற்றுண்டி புகழ்பெற்றது. நூடுல்ஸ் போன்ற உணவு வகை அது.

சுமார் 100 ஆண்டு வரலாறுடையது. இது தொடர்பாக ஒரு கதை வழங்குகிறது. யுன்னான் மாநிலத்தின் தென் கிழக்கிலுள்ள மொங்சி மாவட்டத்திற்கு வெளியே ஏரி ஒன்று இருந்தது.

இந்த ஏரியிலுள்ள ஒரு சிறிய தீவு, அறிஞர்கள் கவிதை மற்றும் நூல் கற்றுக்கொள்ளும் இடமாக இருந்தது. அறிஞர் ஒருவருக்கு அயராது படிப்பதன் காரணமாக உடல் மெல்லிந்துவிட்டது.

இதைக் கண்ட அவருடைய மனைவி கவலைப்பட்டாள். ஒரு முறை அவனுடைய மனைவி, கோழி ஒன்றைக் கொன்று, சூப்பாகத் தயாரித்து, பாத்திரத்தில் வைத்து அவருக்குத் தந்தாள்.

இந்தத் தீவு வந்தடைந்த பின்னரும் பாத்திரத்திலுள்ள சூப் சூடாக இருப்பதை அவருடைய மனைவி கண்டுபிடித்தாள். இதனால் அவள், அங்குள்ள மக்கள் உண்ண விரும்பும் மிசியையும் இதர உணவுப்பொருட்களையும் இதில் வைத்துவிட்டு, சுவையான மிசியைத் தயாரித்தாள்.இதன் விளைவாக, கோழி சூப் மிசியே புகழ்பெற்றது. .  

அவருக்கு இவ்வுணவைக் கொண்டு தரும் வழியில் அவருடைய மனைவி ஒவ்வொரு தடவையும் பாலம் வழியாகச் செல்ல வேண்டியிருந்ததால், இவ்வுணவு வகைக்கு குச்சியௌமிசியெ என்ற பெயரை அங்குள்ள மக்கள் சூட்டினர்

தற்போது குவன்மிங் நகரில் பலர், சூடான குச்சியௌமிசியெயைத் தங்களது அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத உணவாகக் கருதுகின்றனர். இந்த உணவில் சூப், மிசியெ, இதர உணவுப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் தயாரிப்பு முறை பின் வருமாறு:

ஒரு பெரிய கிண்ணத்தில், முதலில் கோழி எண்ணெய், மசாலா தூள், மிளகுத் தூள் முதலியவற்றை போட்டுவிட்டு, பிறகு கோழி, வாத்து, இறைச்சி ஆகியவற்றின் எலும்புகளால் தாயாரிக்கப்பட்ட சூப்பை ஊற்ற வேண்டும்.

இப்போது இந்தச் சூடான சூப் எண்ணெயால் மூடப்பட்டிருக்கிறது. மிகவும் சூடானது. அவசரமாகச் சூப் குடிக்கக் கூடாது. இல்லாவிட்டால், வாயும் தொண்டையும் சுட்டுவிடும். கவனம் வேண்டும்.

சூடான சூப்பில் மீன் துண்டு, கோழி இறைச்சி துண்டு முதலியவற்றை முதலில் போடுங்கள். கரண்டியால் இவற்றை லேசாகக் கலக்கி, அவை பக்குவமடைந்த பின்னர், சோயா மொச்சை, காய்கறிகள், மிசியெ முதலியவற்றை போடுங்கள்.

இறுதியில் soy sauce, மிளகாய் எண்ணெய் ஆகியவற்றைப் போடுங்கள். இப்போது சுவையான குச்சியௌமிசியெ என்னும் உணவு தயார். இப்பொழுதே சாப்பிடலாம்.

இந்த உணவு வகை ருசியானது மட்டுமல்ல, சத்தும் அதிகம். சீன மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் இதைப் பாராட்டுவது வழக்கம். அமெரிக்க இளைஞர் David Campbell குவன்மிங் சென்றடைந்த 2 நாட்களுக்குள், மூன்று தடவை குசியௌமிசியைச் சாப்பிட்டுவிட்டார்.

அவர் கூறியதாவது, இந்த உணவின் பெயர் எனக்குத் தெரியாது. அது நூடுல்ஸ் போன்றது. மிகவும் சுவையானது. நேற்றிரவும் ஒரு முறை சாப்பிட்டேன். உண்மையில் நல்லது. இங்கு அனைத்து உணவுப்பொருட்களும் ருசியானவை என்றார்.

3 மாடிகளுடன் கூடிய உணவகத்தில், சிற்றுண்டிக் கடைகள் ஏராளமாக உள்ளன. குசியௌமிசியெ தவிர, வேறுபட்ட யுன்னான் சிற்றுண்டி வகைகள் பல உள்ளன.

எடுத்துக்காட்டாக, Jasmine கோழி முட்டையுடன் பொறித்தல், கத்தரிக்காய் வாட்டுதல், லொவி மீன் வாட்டுதல் முதலியவை குறிப்பிடத் தக்கவை.