• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-27 08:40:45    
விளையாட்டு வீராங்கனை சாங் யி நிங்

cri

சாங் யி நிங் என்பவர் 6 வயது முதல் மேசை பந்து விளையாடத் துவங்கினார். 1991ஆம் ஆண்டு அவர் பெய்சிங் அணியில் சேர்ந்தார். 1993ஆம் ஆண்டு தேசிய அணியில் அவர் சேர்க்கப்பட்டார். சாங் யி நிங் மிகவும் திறமையுடன் விளையாடுகின்றார். உலகின் சிறப்பு விளையாட்டு வீராங்கனை வரிசையில் முதலிடம் இருக்கின்றார். இப்பொழுது அவர் வாங் நானுக்குப் பதிலாக சீன மகளிர் அணியின் தலைமை வீராங்கனையாக மாறியுள்ளார். அவர் பெற்ற சாதனைகள் வருமாறு: 1998ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன் பட்டப் போட்டியில் மகளிர் குழுப் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் பெற்றதில் முக்கிய பங்கு ஆற்றினார்.

13வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளர் குழுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றனார். மலேசிய ஒப்பன் போட்டியில் மகளிர் ஒற்றையர் போட்டியிலும், இரட்டையர் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றார். 1999ஆம் ஆண்டு சர்வதேச மேசை பந்து தொழில் முறை சுற்றுப் போட்டியின் ஒட்டுமொத்த போட்டியில் சாங் யி நிங் 5வது இடம் பெற்றார்.

2000ஆம் ஆண்டு 45வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார். சர்வதேச மேசை பந்து சம்மேளனத்தின் சுழல் முறை ஒட்டுமொத்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். ஜப்பானிய ஒப்பன் போட்டியில் அவர் சாங் யிங் யிங்குடன் இணைந்து வெள்ளிப் பட்டம் பெற்றார். 2001ஆம் ஆண்டு 46வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் மகளிர் குழுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார், மகளிர் ஒற்றையர் போட்டியிலும், மகளிர் இரட்டையர் போட்டியிலும் மூன்றாம் இடம் பெற்றார்.

உலக கோப்பைக்கான போட்டியில் அவர் மகளிர் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். சர்வதேச மேசை பந்து சம்மேளனத்தின் சுற்று முறை ஒட்டு மொத்த போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். 2002ஆம் ஆண்டு அமெரிக்கா, டென்மார்க், மற்றும் போலந்து சாம்பியன் பட்டப் போட்டிகளில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

14வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் ஒற்றையர் சாம்பியன் பட்டமும், இரட்டையர் இரண்டாம் இடமும், மகளிர் குழுப் போட்டியில் அவர் இரண்டாம் இடம் பெற்றார். 2004ஆம் ஆண்டு உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார். சர்வதேச மேசை பந்து சம்மேளனத்தின் சுற்றுமுறைப் போட்டி, தென் கொரிய ஒப்பன் போட்டி, சிங்கப்பூர் ஒப்பன் போட்டி ஆகியவற்றில் அவர் மகளிர் ஒற்றையர் சாம்பியன், இரட்டையர் சாம்பியன் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.