• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-28 09:41:46    
மேசை பந்து விளையாட்டு வீரர் மாலின்

cri

மாலின் 1980ஆம் ஆண்டு பிப்ரவரி திங்களில் 19ஆம் நாள் பிறந்தார். 6 வயது அவர் மேசை பந்து விளையாடத் துவங்கினார். 1990ஆம் ஆண்டு அவர் மாநில அணியில் சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு தேசிய அணியில் சேர்க்கப்பட்டார்.

முக்கிய சாதனைகள்: 1996ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மேசை பந்து போட்டியில் அவர் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆசிய சாம்பியன் பட்டப் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆடவர் ஒற்றையர் போட்டியில் அவர் மூன்றாம் இடம் பெற்றார்.

1974ஆம் ஆண்டு 44வது சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் வாங் தௌயுடன் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டியில் அவர் இரண்டாம் இடம் பெற்றார். அமெரிக்க ஒப்பன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் வெள்ளிப் பதக்கத்தையும் ஆசிய கோப்பைக்கான போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.

1998ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் ஆடவர் குழுப் போட்டியிலும், ஆடவர் இரட்டையர் போட்டியிலும் சாம்பியன் பட்டம் பெற்றார். மலேசிய ஒப்பன் போட்டியில் அவர் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தையும், சீன மற்றும் லெபனான் ஒப்பன் போட்டிகளில் அவர் ஆடவர் ஒற்றையர் வெள்ளிப் பதக்கத்தையும் உலக கோப்பைக்கான போட்டியின் ஆடவர் ஒற்றையர் 5வது இடத்தையும் பெற்றார்.

2000ஆம் ஆண்டு உலகப் கோப்பைக்கான போட்டியின் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டம் பெற்றார். 45வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் ஆடவர் குழுப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், சுவீடன் மற்றும் போலந்து ஒப்பன் போட்டியில் ஆடவர் இரட்டையர் சாம்பியன் பட்டத்தையும் ஜப்பானிய ஒப்பன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் வெள்ளி இடத்தையும் பெற்றார்.

2001ஆம் ஆண்டு நடைபெற்ற 46வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் ஆடவர் குழுப் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். டென்மார் ஒப்பன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தையும் இரட்டையர் இரண்டாம் இடத்தையும் பெற்றார்.

2002ஆம் ஆண்டு அமெரிக்க ஒப்பன் போட்டியில் அவர் ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றார். 2003ஆம் ஆண்டு நடைபெற்ற 47வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியில் அவர் கலப்பு இரட்டையர் சாம்பியன் பட்டம் பெற்றார். 2004ஆம் ஆண்டு 47வது உலக மேசை பந்து சாம்பியன் பட்டப் போட்டியின் குழுப் போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெற்றார்.