• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-24 09:36:09    
இரு கரை பொருளாதார வர்த்தக கருத்தரங்கு

cri
இரு கரை பொருளாதார வர்த்தக கருத்தரங்கு, ஏப்ரல் 15ம் நாள் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இரு கரை பொருளாதார வர்த்தகப் பரிமாற்றம் கொண்டுவரும் செல்வாக்கு, வேளாண் துறை ஒத்துழைப்பு, நேரடி விமான சேவை, சுற்றுலா, நிதி முதலிய விடயங்கள் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு, கூட்டு முன்மொழிவுகள் உருவாக்கப்பட்டன. தைவான் உடன்பிறப்புகளுக்கு நலன் தரும் 15 கொள்கைகளை சீனப் பெருநிலப்பகுதி அறிவித்துள்ளது. பொருளாதார உலகமயமாக்க சூழ்நிலையில், தைவான் நீரிணை இரு கரை, பரஸ்பர நலன் தரும் ஒத்துழைப்பை ஆழமாக்கி, கூட்டு வளர்ச்சியடைய பாடுபட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

சீன கோமின் தாங் கட்சி கெளரவத் தலைவர் லியன் சான்

பொருளாதார உலகமயமாக்கமும், வட்டார பொருளாதார ஒருமைப்பாடும் தற்போது உலக பொருளாதார வளர்ச்சியின் போக்காக மாறியதோடு, மாபெரும் வாய்ப்பையும் அறைகூவலையும் ஏற்படுத்தியுள்ளன. இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய சீன கோமின்தாங் கட்சியின் கெளரவத் தலைவர் லியான் சான், இந்நிலைமையில், இருகரை ஒன்றிடம் இல்லாததை மற்றது நிறைவு செய்ய வேண்டும் என்றார். ஒருங்கிணைந்த மின்சுற்று நெறி அதாவது மின்னணு IC துறையை எடுத்துக்காட்டாக கொண்டு, இரு கரை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் விளக்கிக்கூறினார்.

மின்னணு IC உருவரைவு, தயாரிப்பு முதலியவற்றில் முன்னணியில் இடம்பெற பெருநிலப்பகுதி பாடுபட்டு வருகிறது. இத்துறையில் தைவானில் முழுமையான தொழில் துறை அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், தைவானின் சந்தை அளவு மிகவும் சிறியாக இருப்பதனால், சர்வதேச சின்னம் நிறுவப்படவே இல்லை. எனவே, இத்துறையின் உற்பத்தி, விற்பனை, தொழில் நுட்பம், சந்தை ஆகியவற்றில் இரு கரை ஒத்துழைத்தால், மாபெரும் வணிக வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.

கடந்த நூற்றாண்டின் 60ம் ஆண்டுகள் முதல், தைவான் பொருளாதாரம், சுமார் 40 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரி அதிகரிப்பு, 9 விழுக்காட்டை எட்டியது. ஆனால், 2000ம் ஆண்டில் மின்சின் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இரு கரை மக்களின் கருத்துக்களை மீறிய தைவான் சுதந்திரம் என்ற கொள்கையைப் பின்பற்றியதால், பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றமடைய வில்லை. இதனால், தைவானின் ஆண்டு பொருளாதார அதிகரிப்பு, 3 விழுக்காட்டாக குறைந்துள்ளது. வேலை இழப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் பெருநிலப்பகுதியுடன் ஒத்துழைப்பைப் பெருக்க வேண்டும் என்று தைவானின் சீனப் பொருளாதார ஆய்வகத்தின் ஆலோசகர் யே வான் அன் கருதினார். அவர் கூறியதாவது:

கடந்த ஆறு ஆண்டுகளில், தைவான் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. இதனால், நுகர்வு கட்டுப்படுத்தப்பட்டது. உள்தேவையும் போதாது. தற்போது, உலக பொருளாதார ஒருமைப்பாடு என்ற சூழ்நிலையில், தைவான் பெருநிலப்பகுதியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.

ஹுசிந்தாவு-லியன்சான் சந்திப்பு

கடந்த சில ஆண்டுகளில் பெருநிலப்பகுதியின் முயற்சியினால், இரு கரை வர்த்தகம் வேகமாக அதிகரித்துள்ளது. 2005ம் ஆண்டில், தைவானின் மொத்த வெளிநாட்டு வர்த்தகம், 37100 கோடி அமெரிக்க டாலராகும். பெருநிலப்பகுதியுடனான வர்த்தகத் தொகை, 9120 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. வர்த்தகச் சாதகமான நிலுவை, 5810 கோடி அமெரிக்க டாலராகும். ஆனால், தைவான் அதிகாரத்தின் வேண்டுமென்றே தடை மற்றும் அரசியல் சீர்குலைப்பினால், இரு கரைகளுக்கிடையிலான நிதி மற்றும் சரக்கு ஏற்றியிறக்கல் நேரடியாக மேற்கொள்ளப்பட முடியாமல் போனது. பெருநிலப்பகுதியின் தொழில் நிறுவனங்கள் தைவான் தீவில் முதலீடு செய்ய முடியவில்லை. இந்தப் பிரச்சினைகள் இதுவரை சரியாக தீர்க்கப்பட வில்லை.

இரு கரைகளுக்கிடையில், சீரான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு முறையை நிறுவி, பொருளாதார உறவு இயல்பாக மாறி, பல்வேறு தடைகளை நீக்க வேண்டும் என்று, இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட 400க்குக் கூடுதலான பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, நேரடி விமான போக்குவரத்து நனவாக்கப்படவில்லை என்பது ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதனால், இரு கரை சிவில் விமான சேவைத்துறையினர்கள் சரக்கு மற்றும் பயணி விமான போக்குவரத்து பற்றி கலந்தாய்வு மேற்கொண்டு, வெகுவிரைவில் நடைமுறைப்படுத்துவதைக் கூட்டாக தூண்ட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் முடிவில் கூட்டு முன்மொழிவு வைக்கப்பட்டுள்ளது. முதலில், இரு கரைகளின் சில நகரங்களுக்கு இடையில் நேரடி விமான போக்குவரத்து நனவாகலாம் என்று சீன சமூக அறிவியல் கழகத்து தைவான் ஆய்வகத்தின் நிபுணர் சாங் குவான் வா தெரிவித்தார். அவர் கூறியாவது:

தைவான் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் நிறுவப்பட்ட சுயேச்சை வர்த்தக வட்டாரத்தைப் பயன்படுத்தலாம். பெருநிலப்பகுதியும் தொடர்புடைய வட்டாரங்களை திறந்து வைக்கலாம். சில பகுதிகளில் நேரடி விமான போக்குவரத்து மேற்கொள்ளலாம். பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ உள்ளிட்ட பெரிய நகரங்களுக்கும், தைவானின் தைபெய், தைஜுங், கெளசுங் உள்ளிட்ட நகரங்களுக்கு இடையில் குறிப்பிட்ட நேரடி விமான போக்குவரத்தை மேலும் முன்னேற்றுவிக்க வேண்டும் என்றார் அவர்.

ஜயாசிங்லின்-லியன் சான் சந்திப்பு

தற்சார்ப்பு ஆற்றலை வலுப்படுத்தி, பொருளாதாரத்தை வளர்ப்பது, இரு கரை ஒத்துழைப்பின் புதிய வாய்ப்பாக மாறியுள்ளது. இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் உரை நிகழ்த்திய சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தலைவர் ஜியாசிங்லின், தொழில் நுட்ப நிலையையும் போட்டியிடும் திறனையும் உயர்த்துவதை முக்கியமாக கொண்டு, இரு கரை பொருளாதார வர்த்தக உறவின் சீரான வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

எதிர்காலத்தில், இரு கரை, சில முக்கிய துறைகளில் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, அறிவியல் தொழில் நுட்ப தகவல்களை அமைப்பு முறையை நிறுவி, புத்தாக்கத் திறனை உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

பெருநிலப்பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சி, பெருநிலப்பகுதி மக்களுக்கு நலன் தரும் மட்டுமல்ல, தைவான் மக்களுக்கு மாபெரும் வணிக வாய்ப்புக்களையும் கொண்டு வந்து, இரு கரை பொருளாதார வர்த்தக பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.