• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-24 14:47:03    
உலகிலுள்ள பல்வகையான எரிமலைகள்

cri

சேறு சகதி கக்கும் எரிமலை

லத்தின் அமெரிக்காவின் பார்படோஸ் தீவின் கிழக்கு பகுதியில் ஐந்து ஆயிரம் மீட்டர் ஆழத்தில், சேறு சகதி கக்கும் எரிமலை உண்டு. இந்த எரி மலையின் வாய், நீள்வட்டமாக அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் மீட்டர் அகலம் உடையது. இருப்பது மீட்டர் தொலைவில் இருந்து, இந்த எரிமலையில் பொங்கி எழும் சேறு சகதிகளைக் காணலாம். இந்த எரிமலையின் மேல்பரப்பு, நெருக்கமான கிருமிகளால் மூடப்பட்டிருக்கிறது. அங்கிருந்து எடுக்கப்பட்ட பொருட்களில் சிப்பி, மிருதுவான ஓடுகொண்ட ஆமை முதலிய விலங்குகளைக் காண முடியும்.

தங்கமும் வெள்ளியும் கக்கும் எரிமலை

இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள எட்னா எரிமலையானது, தங்கமும் வெள்ளியும் கக்கும் எரிமலையாகும். பிரெஞ்சு அறிவியல் குழு ஒன்று அங்கு சோதனை பயணம் செய்தது. இந்த எரிமலை நாள்தோறும் ஆயிரம் கிராம் தங்கமும் ஒன்பது ஆயிரம் கிராம் வெள்ளியும் கக்குகின்றது. ஆனால் இதுவரையிலும் எதையும் சேகரிக்க முடியவில்லை.

பணி கக்கும் எரிமலை

பின்லாந்து நாட்டின் தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள கெம்வேட் எரிமலை வெடித்தெழும் போது, பனிக்கட்டிகளைக் கக்குகின்றது. விநாடிக்கு 420 கன மீட்டர் பனிக்கட்டிகளை வெளியேற்றுகின்றது. இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒன்று புள்ளி மூன்று கன கிலோ மீட்டர் பனிக்கட்டிகள் சேர்ந்து விடும்.

நீர் கக்கும் எரிமலை

மியான்மர் நாட்டின் ராக் மலைப்பள்ளத்தாக்கில் நீர் கக்கும் எரிமலை ஒன்று உள்ளது. இந்த எரிமலை வாய், ஆயிரம் மீட்டர் விட்டமுடையது. அதைச் சுற்றிலும் செடிகொடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன.

திருமண விளம்பரம்

ஜோர்டானில் அபு மஹமத் எனும் நூற்று இருப்பது வயதான முதியவர் ஒருவர், தமது இரண்டாவது மனைவி காலமாகி மூன்று ஆண்டுகளுக்குப் பின் மூன்றாவது மனைவியை மணப்பதென முடிவெடுத்தார். மணமகளின் வயது நாற்பதுக்குள்ளாக இருக்க வேண்டும். அன்பாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தமது திருமண விளம்பரத்தில் எழுதியுள்ளார்.