• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-24 14:50:31    
சவப்பண்ணை

cri

பண்ணையிலே பயிர் வலையும்.

பிணம் விளையுமா?

பிணம் விளையுமோ, விளையாதோ

பிணம் தொடர்பான அறிவு பெருகும் என்று கூறுகிறார் ஒரு அமெரிக்க ஆய்வாளர்.

டென்னெஸ்ஸி பல்கலைக்கழகத்தின் மானிடக்குற்றத் தடயவியல் மையத்தின் பேராசிரியர் வில்லியம் பாஸ் ஒரு சவப்பண்ணையை நடத்தி வருகிறார். அவருடைய பாதையில், வடக்கு அயோவா பல்கலைக்கழகத்தின் உயிரி மானிடவியல் பேராசிரியர் டைலர் ஓ பிரியன் ஒரு சவப்பண்ணை தொடங்க விரும்புகிறார். அயோவா வட்டாரத்தில் உள்ள மண் வளமானது. அங்கே மக்காச்சோளமும், யோயா மொச்சையும் ஏராளமாக விளைகின்றன. இந்த வளமான மண், பிணங்களை அழுகச் செய்வதில் எந்த அளவுக்குப் பங்காற்றுகிறது என்பதை அறிவதே ஓ பிரியனின் நோக்கம். விளை நிலத்தை சவப்பண்ணையாக மாற்றி, வெவ்வெறு நிலைமைகளில் புதைக்கப்படும் பிணங்கள் என்ன வேகத்தில் மக்குகின்றன என்பதை ஆராயப்போகிறார். எடுத்துக்காட்டாக, சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்படும் பிணமும், வெறும் குழியில் தள்ளி புதைக்கப்படும் பிணமும், திறந்த வெளியில் காற்றும் வெயிலும், மழையும் படும்படியாக கிடக்கும் பிணமும் அழுகும் வேகத்தில் வேறுபாடு இருப்பதாக இவர் கூறுகிறார். அறிவியல் மதிப்பு மிக்க இந்த ஆராய்ச்சி, ஒரு பிணம் இறந்து எவ்வளவு காலமாகிறது என்பதை உறுதிப்படுத்தும். குற்றவியல் துப்புத்துலக்கும் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும்.

டென்னஸ்ஸியில் சவப்பண்ணை வைத்துள்ள வில்லியம் பாஸ், கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காற்றுப்புகாத ஒரு வளாகத்திற்குள் வெவ்வேறு நிலைகளில் பிணங்களைப் போட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட பிணங்கள், லேசாக மண்ணைத் தோண்டி தள்ளப்பட்ட பிணங்கள், குளத்தில் பாதி மூழ்கிய நிலையில் உள்ள பிணங்கள், புழுபூச்சிகள், பெருச்சாளிகள் மற்றும் கோடை வெப்பத்துக்கு இரையாகும் பிணங்கள்—இவை எந்த அளவில்—என்ன விகிதத்தில் அழுகுகின்றன என்பதைக் கண்டறிந்து சவப்பண்ணை என்று, பரபரப்பாக விற்பனையான புத்தகமே எழுதியிருக்கிறார். மேலும் தனது நினைவுக்குறிப்புக்களை தொகுத்து, Death's Acre என்ற நூலாக்கியிருக்கிறார்.

இவர் டென்னஸ்ஸியில் சவப்பண்ணை அமைப்பதற்கு முன்னால், பிணம் அழுகும் முறை பற்றி அவ்வளவாக அறியப்பட வில்லை. இப்போது கொலை பற்றி துப்புத்துலக்கும் தடயவியல் போலீசுக்கு இந்தப் பண்ணை உதவியாக இருக்கிறது. சரி, இந்தப் பண்ணைக்கு வேண்டிய எங்கிருந்து கிடைக்கும்?

தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த தமிழறிஞர் சாலை இளந்திரையன் அவர்கள் சென்னையில் இறந்த போது, அவருடைய விகுப்பப்படி, மருத்துவ ஆராய்ச்சிக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு தரப்பட்டது. அது போல, எத்தனையோ பேர் தங்களது இறுதி விருப்பமாக உடல்களை மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கியுள்ளனர். அது போல, இப்போது பிணப்பண்ணைக்கு உடல்களைத் தர, மக்கள் விரிசையில் காத்திருக்கிறார்கள். இது வரை இந்த ஆண்டில் சென்னஸ்ஸி சவப்பண்ணைக்கு தங்களது உடல்களைத் தானமாகத் தர நூறு பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கனவே அறு நூறு விண்ணப்பங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக காத்திருக்கின்றன.

உயிர் போன பிறகு உடம்பை எரியுண்டால் என்ன?மண் உண்டால் என்ன?மருத்துவ ஆராய்ச்சிக்குத்தான் பயன்படுமே!