சீனப் பொருளாதார வளர்ச்சி
cri
சீன சமூக அறிவியல் கழகம் இன்று, சீனப் பொருளாதார எதிர்காலம் மீதான ஆய்வு பற்றிய 2006ஆம் ஆண்டு வசந்தகால அறிக்கையை வெளியிட்டது. இவ்வாண்டு சீன தேசிய பொருளாதாரம் தொடர்ந்து விரைவாக அதிகரிக்கக்கூடும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அதிகரிப்பு விகிதம் சுமார் 9.6 விழுக்காடு எட்டக்கூடும் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது. இவ்வாண்டு பல்வகை விலை குறியீடு உயர்ந்து வரும் அளவு மந்தமாகி குறையக்கூடும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சில வணிகப் பொருட்களின் விலை உயர்ந்து வந்த போதிலும், ஒட்டுமொத்த சரிப்படுத்தலினால், சீன நாட்டில் குடி மக்களின் நுகர்வு விலை 2 விழுக்காடு மட்டுமே உயர்ந்து வருகின்றது. சீரான விலை என்பது, பொருளாதாரம், சமூகம் உள்ளிட்ட பல்வேறு லட்சியங்களின் வளர்ச்சிக்கு சிறந்த சூழலை வழங்கும் என்று அறிக்கை மதிப்பிடுகின்றது.
|
|