• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-25 22:21:11    
அன்பு விற்பனை அங்காடி

cri
இடம்-பெய்ச்சிங் புறநகர்ப் பகுதியில் உள்ள கா பெய் தியன் (Gao Bei Dian)

முகவரி-கா பெய் தியன் சமூக நிவாரணக் கூடம்.

விற்பனைப் பொருள்-அன்பு, பரிவு, ஆதரவு மற்றும் இவை போன்ற இன்றைய புதுமைப் போட்டிச் சமுதாயத்தில் அரிதாகக் கிடைக்கக்கூடிய பொருட்கள் பயனாளிகள்-பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை மக்கள்.

ஆம்! ஏழைபடும் பாட்டை உணர்ந்த சீன மக்கள் குடியரசு பரிவோடு நிறுவியுள்ள இந்த சமூக நிவாரணக் கூடத்தில் விற்பனை செய்யப்படுகிறது அன்பு மிகவும் மலிவான விலையில்? அந்த மலிவான விலையையும் ஏழை மக்கள் கொடுக்க வேண்டியதில்லை. அரசாங்கமே கொடுத்து விடுகிறது. ஆனால் அந்த ஏழைகளுக்குப் பணம் கொடுத்துப் பொருள் வாங்குகிறோம் என்னும் உணர்வு இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் விலை குறிக்கப்பட்டு விற்பனை என்று பெயரிடப்பட்டுள்ளது. வாருங்கள் நேயர்களே! நாமும் போவோம் கா பெய் தியன்! அன்பு விற்பனை எவ்வளவு உற்சாகமாக நடக்கிறது என்பதைப் பார்த்து வருவோம்!

இந்த அன்பு விற்பனைக் கடை வாரத்தில் செவ்வாய்க் கிழமை மட்டுமே திறக்கப்படுகிறது. இந்தக் கடைக்கு பொருள் வாங்க வந்துள்ள 59 வயது லியு சுன் யிங் (Liu Chun Ying) சொல்லும் பரிதாபக் கதையைக் கேட்கலாமா?

"எங்க குடும்பம் ஏழைக் கடும்பம். என்கணவருக்கு ஒவ்வொரு மாதமும் 1003 யுவான் ஓய்வூதியம் கிடைக்குது. அது ஒண்ணுதான் வருமானம். எங்களுக்கு ஒரே மகன். 20 வயது. ஆனா அவனுக்கு முளைக் கோளாறு. வருமானம் பத்தவில்லை. அதனால் நகரின் மையப் பகுதியில் இருந்து இங்கே குடிவந்து விட்டோம். அவரு ஏதோ மின்சார சாதனங்களை பழுது பார்க்கிறாரு. அதுல ஒண்ணும் பெரிசா வருமானம் வர்றதில்லை."

இப்படிப்பட்ட நிலையில் தான் 2005ஆம் ஆண்டில் கா பெய் தியன் சமூக நிவாரணக் கூடத்தின் அன்பு விற்பனை அங்காடியின் பயனாளிகளில் ஒருவராக லியு சுன்யிங் குடும்பம் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு அந்தக் குடும்பத்தின் இன்னல்களுக்கு ஓரளவு விடிவு வந்தது. வறுமையை விரட்ட இந்த அங்காடி என்ன மந்திரவித்தையை விற்பனை செய்கிறது? இதன் பின்னணியைத் தெரிந்து கொள்வோமா?

2003 ஆகஸ்ட் திங்களில் இந்தக் கடை திறக்கப்பட்டது. வசதிபடைத்தவர்கள் வாரிவழங்கும் நன்கொடைகள் மற்றும் பொருட்களையும், அரசு வழங்கும் நிதி உதவியையும் கொண்டு, ஆதரவற்ற ஏழைக்குடும்பங்களுக்கு சமூக உதவி கிடைக்க இந்தக் கடை பாடுபடுகிறது. அரசும், தனியாரும் இணைந்து நடத்தும் இந்த அங்காடியில் பல பிரிவுகள் இருக்கின்றன. அவற்றைச் சுற்றிப் பார்க்கலாமா? நம்மை அழைத்துப் போகிறார் கடை ஊழியர் என் ஜின்ட்டுங் (En Jintdng).

"துணிப்பிரிவு இது. இங்கே பலதரப்பட்ட மக்களுக்குத் தேவையான உடைகள் இருக்கின்றன. ஓவர்கோட், ஜீன்ஸ், படுக்கைவிரிப்பு…. இந்த மாதிரி! ஆனால் எல்லா உடைகளுமே பழையவை. வசதியான மக்கள் பயன்படுத்திய பிறகு வேண்டாம் என்று ஒதுக்கியவை. அவற்றை நாங்கள் சேகரித்து வந்து இங்கே ஏழைகளுக்கு கொடுக்கிறோம். இது உணவுப் பொருள் பிரிவு. அரிசி மூட்டைகளும், சமைய எண்ணெய் பாட்டில்களும் அடுக்கி வைத்திருக்கிறோம்.