சீனப் பொருளாதாரத்தில் வெளிநாட்டுத் திறப்புப் பணி
cri
சீனப் பொருளாதாரத்தில் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேலும் வளர்ச்சியடைவதால், உள்நாட்டுப் பொருளாதாரத்துக்குப் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகப் பணியகம் நேற்று வெளியிட்ட 2005ஆம் ஆண்டுக்கான சீனாவின் சர்வதேச வரவுச்செலவு அறிக்கை காட்டியுள்ளது. சர்வதேச வரவுச்செலவில் அடிப்படை சமநிலையை நிறைவேற்றும் பொருட்டு, சீனாவில் உள் நாட்டுத் தேவையை அதிகரித்து, பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவதை விரைவுபடுத்த வேண்டும். ஏற்றுமதி கட்டமைப்பை மேம்படுத்தி, இறுக்குமதி அதிகரிப்புக்கு ஆதரவளிக்க வேண்டும். நிதிச் சந்தையை வளர்த்து, வங்கி சேமிப்பு, முதலீடு மற்றும் நுகர்வாக மாறுவதை தூண்டி, ரன்மின்பியின் மாற்று விகித முறைமையை முழுமையாக்க வேண்டு என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
|
|