வேளாண் உற்பத்திப் பொருள் பாதுகாப்புச் சட்டம்
cri
சீனாவில் வேளாண் பொருள் பாதுகாப்புச் சட்டம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீன மக்கள் கவனம் செலுத்தும் வேளாண் பொருள் பாதுகாப்புப் பிரச்சினையைப் பயனுள்ள முறையில் தீர்ப்பதற்கு இது துணை புரியும். வேளாண் பொருட்கள் சந்தையில் நுழைவதை அனுமதிக்கும் முறைமையை நிறுவுவதைக் குறிகோளாகக் கொண்ட இச்சட்டத்தில், வேளாண் பொருள் கண்காணிப்பையும் அதன் உற்பத்தியையும் நிர்வாகத்தையும் வலுப்படுத்துவது பற்றிய விரிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. நுகர்வோர், நிலைமையை அறிந்துகொள்ளும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. தவிர, உலகில் நடைமுறைக்கு வந்துள்ள கண்காணிப்பு மற்றும் நிர்வாக அமைப்பு முறையையும் வழியையும் இச்சட்டம் பயன்படுத்துகின்றது. இவ்வாண்டு நவம்பர் முதலாம் நாள் இச்சட்டம் நடைமுறைக்கு வரத் துவங்கும்.
|
|