• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-03 16:45:16    
திபெத்தில் சுற்றுலா

cri
திபெத்தில் உள்ள எழில் மிக்க இயற்கை காட்சியானது, இங்கு முதன்முதலாகச் சுற்றுலா மேற்கொள்வோரின் கண்களுக்கு விருந்தாகின்றது. இங்கு, வானம் தெள்ளத்தெளிவாக உள்ளது. கைக்கு எட்டும் தூரத்தில் மேகத்தைப் பார்க்கும் போது, அதனுடன் உரையாட, உறவாட வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். உறைபனி அடர்ந்த மலைகள், அமைதியாகவும் கம்பீரமாகவும் காணப்படுகின்றன. திபெத் இனத்தின் கிராமப்புறப் பண்பாடும் வளம்மிக்கவை. திபெத் இனத்தின் நாடகம், கிராமப்புறப்பாடல், ஓவியம் இவையனைத்தும் தன்னிகரற்றவை. திபெத் இனப் பண்பாட்டுக்கும் இதர தேசிய இனப் பண்பாட்டுக்குமிடையிலான பரிமாற்றம் மிகப் பரந்தளவில் நடைபெறுகின்றது. திபெத்தில் காணப்படும் பல சுவர் ஓவியங்களிலிருந்து இதைக் கண்டறியலாம். மன்னர் கசார் சுய சரிதை எனும் காவியம் உலகில் மிக நீளமான காவியமாகும். திபெத் மக்கள் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் இதை விரும்பிப் படிக்கின்றனர். ரஷிய, ஆங்கில, பிரெஞ்சு, இந்தி மற்றும் மங்கோலிய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.