30 பள்ளிப்பட்டி நேயர் பி.ஆர்.சுப்ரமணியன் எழுதியது. விண்ணை சாடிய சீனாவின் இரண்டாவது விண்கலம் என்ற செய்தி தொகுப்பைக் கேட்டேன். சீனாவின் சொந்த தொழில்நுட்பம் மூலம் விண்வெளிக்கு ஓடம் அனுப்பி தனது வளர்ச்சியை உலகுக்கு பறைசாற்றியது. உலகின் மூன்றாவதும், ஆசியாவின் முதலுமாக விண்வெளியில் சாதனை படைத்துள்ளது என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து துறையூர் குறிஞ்சி குமரன் எழுதிய கடிதம். சேந்தமங்கலம் திரு. எஸ். எம். ரவிச்சந்திரன் இந்த ஆண்டின் சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டு சீனச் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக வானொலி மூலம் இருப்பதாக அறிந்ததாகவும், அவருக்கு தன் பாராட்டுக்கள், வானொலி நிலையத்தவருக்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார். அன்பு நேயர்களே, சீனப் பயணம் வந்திருந்த நேயர் எஸ். எம். ரவிச்சந்திரன் நேற்று அதிகாலை பெய்சிங்கிலிருந்து புறப்பட்டு இரவு தமிழகம் நல்லபடியே வந்தடைந்தார் என்பதை அறிந்தோம். சிறப்பான பயணத்தை முடித்த அவருக்கு எங்கள் பாராட்டுக்கள்.
க்ளீட்டஸ்: அடுத்த கடிதம் கோவை மாவட்டம் தென்பொன்முடி நேயர் தே.நா.மணிகண்டன் எழுதியது. 13.02.2006 அன்றைய சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சீன விவசயிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை முறை என்ற செய்தி தொகுப்பின் மூலம் சீன பெருநிலப்பகுதியில் 80 விழுக்காட்டினர் விவசாயிகள், இவர்களின் நிலையை சரி செய்ய சீன உள்நாட்டு அரசாங்கங்கள் வேளான் வரியை ரத்து செய்துள்ளன என்பதை அறிந்தோம். இதன் மூலம் ஏழை விவசாயிகள் நிலை சற்று மேம்படும், காலப்போக்கில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பதை சீன அரசு புரிந்து செயல்படுவதை அறிந்து மகிழ்வுற்றோம் என்று எழுதியுள்ளார். மதுரை அண்ணா நகர் நேயர் என். ராமசாமி 14.2.2006 அன்று சின்னவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் 30 பாரம்பரிய ஆற்று பாலங்களைக் கொண்ட சசுசான் நயம்பட கூறப்பட்டது. இயற்கை அழகு கொஞ்சும், தாமரை போல் மிதக்கும் இந்நரை பற்றி அறிந்து பரவசமடைந்தேன். இந்நகரை சுற்றி பார்க்கும் நாள் எந்நாளோ என்று ஆவல் வெளியிட்டுள்ளார்.
வாணி: கவலை வேண்டாம் ராமசாமி அவர்களே. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. முயற்சி பலன் தரும். சுற்றுலாப் பயணிகளை சீனா அன்போடு வரவேற்கிறது.
|