99வது சீன ஏற்றுமதி வர்த்தகப் பொருட்காட்சி இன்று நிறைவுற்றது. இதில் மொத்தம் செய்யப்பட்ட வர்த்தகத் தொகை 3220 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. 3000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டுவது இதவே முதல்முறை.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு சீனாவுடன் செய்த வர்த்தகத் தொகை முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன. பொருள் வகையிலிருந்து பார்த்தால், இயந்திர மின் உற்பத்தி பொருட்கள், துணி பொருட்கள், வேளாண் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றி விற்பனை தொகை பெருமளவில் அதிகரித்தது.
கடந்த 15ஆம் நாள் குவாங் சோ நகரில் துவங்கிய இந்த பொருட்காட்சியில், சுமார் 10000 உள்நாட்டு தொழில் நிறுவனங்களும் 30 அந்நிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களும் கலந்து கொண்டன.
|