இன்று முதல் சீன பெருநிலப்பகுதியின் மக்கள் அந்நிய செலாவணி வாங்குதல் தொகை, ஆண்டு தோறும் நபர் ஒருவருக்கு 20 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்டும். இத்தொகையில் பயன்பாடு பற்றி, தேசிய அந்நிய செலாவணி நிர்வாக ஆணையம் கேள்வி எழுப்பாது.
இந்த நல்ல செய்தியினாலும், மே தின விடுமுறையினாலும், வெளிநாட்டு சுற்றுலா செய்யும் மக்கள், அந்நிய செலாவணியை மாற்ற வங்கிக்குச் சென்றனர். பெய்ஜிங்கில், சீன வங்கி, தொழில் மற்றும் வணிக வங்கி உள்ளிட்ட அரசுசார் வணிக வங்கிகளின் அந்நிய செலாவணி மாற்றல் அதிகரித்துள்ளது. அந்நிய செலாவணி மாற்றும் நகரவாசிகளில் பெரும்பாலோர், வெளிநாட்டுச் சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
|