அரசு நிலை நிலவியல் பூங்காக்கள்
cri
 தற்போது சீனாவில் 138 அரசு நிலை நிலவியல் பூங்காக்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் நிலவியல் மரபுச்சிதிலப் பாதுகாப்புப் பணி தொடர்ந்து வலுப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், இந்தப் பாதுகாப்புக்கு 9 கோடியே 60 லட்சம் ரன்மின்பி யுவானை மத்திய நிதித் துறை ஒதுக்கீடு செய்தது. அத்துடன் நிலத்தின் கீழ் புதைந்துகிடக்கும் தொன்மை வாய்ந்த உயிரினங்களின் எஞ்சிய பகுதிகளைப் பாதுகாக்கும் பணியும் வளர்ச்சியடைந்துள்ளது. நிலவியல் மரபுச்சிதில வளத்தைப் பாதுகாத்து, சமூக-பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசு நிலை நிலவியல் பூங்காக்களை சீனா நிறுவுவதன் நோக்கம் ஆகும். 1985ல் சீனாவில் முதலாவது அரசு நிலை நிலவியல் இயற்கைப் பாதுகாப்பு மண்டலம் நிறுவப்பட்டது முதல் இப்பாதுகாப்புப் பணி விரைவாக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டில், புதிதாக அனுமதி பெற்ற அரசு நிலை நிலவியல் பூங்காக்களின் எண்ணிக்கை 53ஐ எட்டியுள்ளது.
|
|