• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-01 17:19:30    
மே தின விடுமுறையைக் கழிக்கும் சீன மக்கள்

cri

ஒவ்வொரு ஆண்டின் மே தின விழாவின் போது, சீன மக்கள் 7 நாள் விடுமுறையை அனுபவிப்பது வழக்கம். பலரின் திருமண விழாவும் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளும் இந்த நாட்களில் அதிகமாக நடைபெறுகின்றன. மேலும் பலர் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் சுற்றுலா செய்ய விரும்புகின்றனர். இந்த விழா நாட்களை மகிழ்ச்சியுடன் மக்கள் கழிப்பதற்குத் துணைபுரியும் வகையில் தற்போது சீனாவின் பல்வேறு தொடர்புடைய பிரிவுகள் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளில் மே தின விழா நாட்களின் போதெல்லாம், சுமார் பத்து கோடி மக்கள் வெளியே சென்று சுற்றுப் பயணம் செய்தனர். இவ்வாண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக சீனத் தேசிய பாதுகாப்பு உற்பத்தி கண்காணிப்பு நிர்வாகமும், சீனத் தேசிய விடுமுறை அலுவலகமும் தொடர்புடைய உள்ளூர் பிரிவுகளுடன் இணைந்து, சுற்றுலாவுக்கான பாதுகாப்பு நிலை பரிசோதனையை முன்கூட்டியே செய்துள்ளன. பல்வேறு முக்கிய நகரங்களிலும், இயற்கை காட்சித் தலங்களிலும் பாதுகாப்புப் பணி வலுப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை காட்சித் தலம், ஹோட்டல், சுற்றுலா போக்குவரத்து, வெளிநாட்டுச் சுற்றுலா முதலிய துறைகளில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

சீன தேசிய பாதுகாப்பு உற்பத்தி கண்காணிப்பு நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவாங் யீ கூறியதாவது- "மே தின விடுமுறைக்கு முன், பல்வேறு இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. விடுமுறை நாட்களில் மக்கள் கூடியிருக்கும் அனைத்து இடங்களிலும் திடீர் சம்பவங்களைச் சமாளிக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பாதுகாப்பு நடவடிக்கைக்கும் பொறுப்பாளர்கள் உள்ளனர்"என்றார் அவர்.

இவ்வாண்டின் மே தினத்துக்கு முன், சீனாவின் பல்வேறு சுற்றுலா பிரதேசங்களில், படகு, தொங்கு கம்பி பாதை, கம்பிவிட ஊர்தி, பெரிய விளையாட்டு வசதிகள் ஆகியவற்றின் மீது முக்கியமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளையில் வண்டி நிறுத்த இடம், சீட்டு விற்பனை ஜன்னல், காட்சி இடங்களின் நுழைவாயில் முதலிய இடங்களில் வழிகாட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தவிரவும், எல்லா காட்சி இடங்களிலும், பயணிகள் அளவுக்கு மீறி கூடினால் ஏற்படும் நெரிசலைச் சமாளிக்கும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. ஏற்படக் கூடிய பல்வகை விபத்துகளையும் சமாளிக்கும் நடவடிக்கைகள் எந்நேரத்திலும் மேற்கொள்ளப்படும். பெய்சிங்கிலுள்ள பெரும் சுவர் காட்சிப் பிரதேசத்தில், பயணிகள் நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, நாளுக்கு 60 ஆயிரம் பயணிகள் மட்டும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அத்துடன் வெளியேறுவதற்கான 5 சாவடிகள் கூடுதலாக நிறுவப்பட்டுள்ளன. இந்த காட்சித் தலத்தின் பொறுப்பாளர் வாங் வெய் துங் எமது செய்தியாளரிடம் கூறியதாவது-

ஓர் இடத்தில் நெரிசல் ஏற்படும் போது, நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அதே வேளையில் நாங்கள் சீட்டு விற்பனையைக் குறைப்போம். பெரும் சுவரில் ஏறுபவர் இல்லாமல் இறங்குபவர் மட்டும் இருக்க செய்வோம் என்றார் அவர். தென்மேற்கு சீனாவின் சுச்சுவான் மாநிலத்திலுள்ள ஓ மெய் மலை இயற்கை காட்சித் தலத்தில், பயணிகள் தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், ஒழுங்கு சீராக இருக்கின்றது.

சுச்சுவான் மாநிலத்தின் பொது பாதுகாப்பு அலுவலகத்தின் அதிகாரி சோ சௌ குன் எமது செய்தியாளரிடம் கூறியதாவது- விடுமுறை சுற்றுலாவுக்கான பாதுகாப்பு பணிமுறைமையை நாங்கள் ஏற்கனவே துவக்கியுள்ளோம், போதுமான காவல் துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். பல்வேறு துறைகளிலான ஆபத்து நிலையை உரிய நேரத்தில் கண்டறிந்து ஒழித்து, ஒரு சிறந்த சுற்றுலா சூழ்நிலையை சுறுசுறுப்பாக உருவாக்குகின்றோம் என்றார் அவர்.