• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-02 20:57:47    
விண்கலம் ஆய்வு

cri
2008ம் ஆண்டில் சீன விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடப்பார்கள். இதற்காக ஷென்சோ-7 விண்கலம் விண்வெளியில் ஏவப்படும். கடந்த ஆக்டோபலில் ஷென்சோ-6 விண்கலத்தில் 2 சீனர்கள் 5 நாட்கள் வெற்றிகரமாக விண்வெளியில் வலம் வந்ததை அடுத்து, ஷென்சோ-7 விண்கலத்தையும் அடுத்த ஆண்டிலேயே செலுத்தி விடலாமா என்று நினைத்தார்கள். ஆனால், எப்போது செலுத்துகிறோம் என்பதைவிட, பாதுகாப்பும் நம்பகமும் தான் முக்கியம் என்று சீனாவின் மனித விண்வெளி பயணத்திட்டத்தின் துணைத் தலைவர் சாங் சின் வேய் கூறினார்.

விண்வெளியில் முதன்முதலாக நடக்கப்போகும் மூன்று சீன விண்வெளி வீரர்களைத் தெரிந்தெடுக்கும் பணி தொடங்கிவிட்டது. ஷென்சோ-6 விண்வெளிப் பயணத்திற்காக, திரட்டப்பட்ட 14 ஜெட் விமானிகளில் குழுவில் இருந்து தான். ஷென்சோ-7 பயணத்திற்கான 3 விண்வெளி வீரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அவர்களுக்கு விண்வெளிப் பயணப் பயிற்சி தருவதற்காக எடையில்லாச் சூழலும், தண்ணீர்க்குளம் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. இதில் விண்வெளிப்பயண உடை போன்ற உடைகளை அணிந்து அவர்கள் விண்கலத்தை விட்டு வெளியே போய் விண்வெளியில் இயங்குவதற்கான பயிற்சி எடுப்பார்கள்.

இதற்கிடையில், ஒரு துணுக்குச்செய்தி.

இந்த ஆண்டில் ஒன்பது செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இவற்றில் ஒன்று விதை செயற்கைக்கோள். விண்வெளியில் விதைப் பெருக்கம் செய்யமுடியுமா என்று ஆராய்வதற்காக, ஏப்ரல் திங்களில் இந்த விதை செயற்கைக்கோள் செலுத்தப்படும் என்றார் சாங் சின்வேய்.

அண்ட வெளி கதிர்வீச்சு மற்றும் நுண்ணிய ஈர்ப்பு போன்ற சிறப்பான சூழ்நிலையில் உயர் வினைச்சல் தரும் உயர்தரமான தாவர வகைகளை வளர்க்க முடியும் என்று ஆராயப்படும். இந்தச் செயற்கைக்கோள் விண்வெளியில் ஆராய்ச்சியை முடித்து விட்டு பூமிக்குத் திரும்பிவிடும் திறன் படைத்தது.

ஆயிரத்து தொன்னூற்று எழுப்பதாம் ஆண்டுகளில் இருந்து இதுவரை எழுப்பதுக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்வெளியில் சீனா செலுத்தியுள்ளது. இவற்றில் சுமார் இருப்பது செயற்கைக் கோள்கள் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.