கடந்த ஆண்டு சீனாவின் சர்வதேச வரவுசெலவில் இடர் எதிர்ப்பு ஆற்றல் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று சீன தேசிய அந்நிய செலாவணி நிர்வாக அலுவலகம் கூறியுள்ளது. தற்போது ரன்மின்பி மாற்று விகித முறைமையின் சீர்திருத்தம் சீராக நடைபெறுகின்றது என்று அது அண்மையில் வெளியிட்ட 2005ம் ஆண்டுக்கான சீனாவின் சர்வதேச வரவுசெலவு அறிக்கை கூறியது. தற்போது உலகின் பொருளாதாரம் சீராக வளரும் கட்டத்தில் உள்ளது. சீனப் பொருளாதாரத்தில் விரைவான அதிகரிப்பு, நல்ல பயன், ஏற்றத்தாழ்வு இல்லாத விலை ஆகிய சிறந்த நிலைகள் தோன்றியுள்ளன. இவையனைத்தும், சீனாவின் சர்வதேச வரவுச்செலவு சீராக இருப்பதற்கு வழிகோலியுள்ளன என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியது.
|