• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-05-02 17:39:32    
விடுமுறையில் சொந்த கார் சுற்றுப்பயணம்

cri

சீனாவில் ஒவ்வொரு மே திங்கள் முதல் நாள் முதல் 7ஆம் நாள் வரை நாடு தழுவிய விடுமுறையாகும். சீனர்களில் பெரும்பாலோர் இந்த விடுமுறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். முன்பு சீனர்கள் தொடர்வணடி, விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளின் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். ஆனால், சொந்தமாக கார் வாங்குவது சீனாவில் பரவத் தொடங்கிய பின், இவ்வாண்டின் மே தின விடுமுறை காலத்தில், மேலும் அதிகமான சீனர்கள் சொந்தக காரை ஓட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

திரு கொ ஜியன், பெய்ஜிங்கின் ஒரு செய்தியேடு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அவர் சுற்றுப்பயணத்தை விரும்புகிறார். கடந்த ஆண்டின் இறுதியில் அவர் ஒரு காரை வாங்கினார். கடந்த 29ஆம் நாள் மாலை அவர் காரை பரிசோதித்து, தமது வாழ்வில் முதல்முறையான சொந்த கார் சுற்றுப்பயணத்துக்கு தயரானார்.

"முன்னர், தொடர்வண்டி அல்லது விமானம் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இவ்வாண்டின் மே தின விடுமுறையில், எமது காரை ஓட்டி, காதலியுடன் சிங் தௌ நகரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயாராக இருக்கின்றேன். இது ஒரு புத்தம் புதிய உணர்வு" என்றார் அவர்.

திரு கொ ஜியன் போன்று இவ்வாண்டின் மே தின விடுமுறையில் சொந்த காரை ஓட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீனர்கள் மிகவும் அதிகம் என்று தெரிகிறது.

மேலும் கூடுதலான மக்கள் தங்களது சொந்த காரை ஓட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு காரணம் என்ன? இது குறித்து, சீன சுற்றுப்பயண நிறுவனத்தின் சொந்த கார் சுற்றுப்பயண மன்றத்தின் பணியாளர் தாங் மின் கருத்தைத் தெரிவித்தார். ஒன்று, கடந்த சில ஆண்டுகளில் சீன பொருளாதார வளர்ச்சியுடனும் பொது மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருவதுடனும், மேலும் அதிகமான சீன குடும்பங்கள் கார்களை வைத்துள்ளன. சொந்த கார் சுற்றுப்பயணத்தின் வளர்ச்சிக்கு இது அடிப்படையிட்டுள்ளது. இரண்டு, கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் போக்குவரத்து கட்டுமானம், குறிப்பாக அதிவேக சாலையின் கட்டுமானம் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளது. சொந்த கார் சுற்றுப்பயணத்தின் செழுமைக்கு இது உரிய நிலையை உருவாக்கியுள்ளது.

தவிர, பாரம்பரிய சுற்றுப்பயண முறையை விட, சொந்த கார் சுற்றுப்பயணம் தனிச்சிறப்பான மேம்பாடுகளைக் கொண்டிருக்கிறது. சுற்றுப்பயண நிறுவத்துக்குச் சென்று பதிவு செய்ய வேண்டாம். சுற்றுப்பயணத்தின் போது வண்டிகளை மாற்ற வேண்டாம். திரு தாங் மின் கூறியதாவது—

"சொந்த கார் சுற்றுப்பயணத்தின் போது, காரை ஓடும் மகிழ்ச்சியை தவிர, தனிச்சிறப்பு சுற்றுப்பயண நெறியை ஏற்பாடு செய்து, எந்த நேரத்திலும் காரை நிறுத்தும் சுதந்திரத்தையும் அனுபவிக்கலாம். இதனால், கார் வைத்துள்ள இளைஞர்கள் இதனை வரவேற்கின்றனர்" என்றார் அவர்.

பெய்ஜிங்கில் வாழும் வாங் அம்மையார், சுற்றுப்பயணத்துக்கு முன் செய்தியாளரிடம் கூறியதாவது—

"சொந்த காரை ஓட்டி சுற்றுப்பயணம் மேற்கொள்ள நான் விரும்புகின்றேன். ஏனென்றார் சொந்த காரைக் கொண்டிருப்பது சீனர்களின் கனவு. தமது காரை ஓட்டி அழகான இடத்துக்குச் சென்று ஓய்வு பெறுவது இந்த கனவில் மிக சிறந்த அம்சமாகும். சீனர்கள் பலர் கனவை நனவாக்கும் மனநிலையுடன் தமது முதல்முறையான சொந்த கார் சுற்றுப்பயணத்தைத் துவக்குகின்றனர் என்று நான் கருதுகின்றேன்" என்றார் அவர்.

சொந்த கார் சுற்றுப்பயணத்தின் வளர்ச்சி, சீனப் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய தாக்கம், குறைத்து மதிப்பிட முடியாது. பெட்ரோல், கார் நிறுத்தும் கட்டணம் உள்ளிட்ட செலவைக் கருத்தில் கொண்டு, பாரம்பரிய சுற்றுப்பயண முறையை விட சொந்த கார் சுற்றுப்பயணத்தின் செலவு அதிகம். அலட்சியம் செய்யப்பட முடியாத புதிய தொழிலாக இது திகழ்கிறது என்று நிபுணர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுச் சுற்றுலா பொருளாதாரத்தை விட, சொந்த கார் சுற்றுப்பயணம், மேலும் அதிகமான தொழில்களை முன்னேற்றுவிக்கும். அதன் உள்ளார்ந்த பொருளாதார ஆற்றலும் மிகப் பெரியது. சொந்த கார் சுற்றுப்பயணத்தின் வளர்ச்சி, சீன மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை வளப்படுத்துவது மட்டுமல்ல, சீனப் பொருளாதாரத்துக்கும் புதிய தெம்பு ஊட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.