அடுத்த ஐந்து ஆண்டுகளில், சீனாவின் கிராமங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆற்றல், ஒரு கோடியே 50 லட்சம் கிலோவாட் அதிகரிக்கப்படும். நீர் ஆற்றலைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி செய்யும் 400 மாவட்டங்கள் நிறுவப்படும் என்று சீனா திட்டமிடுகிறது. இந்தக் குறிக்கோளை நனவான பிறகு, ஒரு கோடி கிராமவாசிகளின் மின்சார பயன்பாட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட முடியும்.
நீர் ஆற்றல் மூலவளத்தை சரியாக பயன்படுத்துவது, கிராமங்களில் நீர் ஆற்றலைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை வளர்ப்பது ஆகியவை, கிராமத்தில் மின் பயன்பாட்டுப் பிரச்சினையைத் தீர்த்து, விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பயனுள்ள வழிமுறையாகும். அடுத்த ஐந்தாண்டுகளில், சீனா தொடர்புடைய துறைகளில் முதலீட்டை அதிகரித்து, விவசாயிகளின் மின் பயன்பாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் என்று சீன நீர் சேமிப்பு அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
|